தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள் மற்றும் மேலாண்மை

தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள் மற்றும் மேலாண்மை

பயிர் பாதுகாப்பு : தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்
நாற்றழுகல்
முன்பருவ இலைக்கருகல்
ஃபுசேரியம் வாடல்
செப்டோரியா இலைப்புள்ளி
பாக்டீரியா வாடல்
பாக்டீரியா இலைப்புள்ளி
தக்காளி தேமல் நோய்(TMV)
இலை சுருட்டை நோய்(TLCV)
தக்காளி புள்ளி வாடல் (TSWV)

 

 

1. நாற்றழுகல்:
அறிகுறிகள் :
நாற்றழுகல் தக்காளியில் இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது. அதாவது முளைக்குமுன் மற்றும் முளைத்தபின் ஏற்படுகிறது.
முளைக்கும் முன் நிலையில் மண் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே நாற்று இறந்துவிடுகிறது.
முளைக் குருத்து முற்றிலுமாக அழுகிவிடும்.
முளைத்த பின் நிலையில் இளம் திசுக்கள் நில மட்டத்திலேயே நோய்த் தொற்று ஏற்படுகிறது.
பாதிக்கப்பட்ட திசுக்கள் மென்மையாகவும், நீர்த் தோய்ந்தும் காணப்படும். நாற்று தலை கீழே வீழ்ந்து அல்லது உடைந்து விழுந்துவிடும்.
மேலாண்மை :
உயர்த்தப்பட்ட நாற்றங்கால் மேடைகளை உருவாக்க வேண்டும்.
தொடர்ச்சியான நீர்ப்பாசனம் மற்றும் சரியான வடிகால் வசதி அமைக்க வேண்டும்.
காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2% அல்லது போர்டிக்ஸ் கலவை கொண்டு நனைக்க வேண்டும்.
டிரைக்கோடெர்மா விரிடி (4கி / கிலோ விதை) அல்லது தைரம் (3கி / கிலோ விதை) விதை சிகிச்சை அளிப்பது ஒன்றே முளைக்குமுன் ஏற்படும் நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்தும்.
மேகமூட்டமான வானிலை இருக்கும்பொழுது 0.2% மெட்டாலிக்ஸில் தெளிக்கவும்.

 

 

 

 

2. முன்பருவ இலைக்கருகல் :
அறிகுறிகள்:
இது தக்காளியின் எந்த வளர்ச்சி நிலையிலும் பொதுவாக இலைகளின் மீது ஏற்படும் நோய் ஆகும்.
பூஞ்சை இலைகளை தாக்கும்பொழுது இலையில் புள்ளிகள் ஏற்பட்டு கருகத் தொடங்கும். முன்பருவ இலைக்கருகல் அதிகமாக வயது முதிர்ந்த இலைகளில் சிறியதாக கருப்பு காயங்களாக காணப்படும்.
புள்ளிகள் பெரிதாகி மற்றும் பொதுவான வளையங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும்.
திசுக்களை சுற்றியுள்ள புள்ளிகள் மஞ்சள் நிறமாகின்றன. அதில் வெப்பநிலை அல்லது ஈரப்பதம் ஏற்படும்பொழுது அதிக அளவில் இலைகள் இறந்துவிடுகின்றன.
இலையைப் போன்றே தண்டுகளிலும் காயங்கள் ஏற்படுகின்றன.
பின்பருவ அழுகல் நோயினால் தாவரம் பிடுங்கி நடும்பொழுது பூஞ்சையால் பாதிக்கப்பட்ட சில சமயங்களில் இறந்துவிடுகிறது. இந்த பூஞ்சை புள்ளிவட்டம் அல்லது தண்டு வழியாக பழங்களை பாதிக்கிறது.
காயங்கள் பொதுவாக பழம் முழுவதிலும் காணப்படுகின்றன. பொதுவான வளையங்கள் பழங்களில் காணப்படும்.

மேலாண்மை :
பயிர் குப்பைகளை அகற்றுதல் மற்றும் அழித்தல்
பயிர் சுழற்சி முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம்.
திறம்பட நோயைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 0.2% தெளிக்க வேண்டும்.

 

 

 

3. ஃபுசேரியம் வாடல் :
அறிகுறிகள் :
நோயின் முதல் அறிகுறியாக கிளை நரம்புகள் தெளிவாகி இலைகளில் பசுமை சோகை ஏற்படுகிறது.
இளம் இலைகள் கருகி சில நாட்களில் இறந்துவிடும். இலைக்காம்பு மற்றும் எல்லா இலைகளும் வாட ஆரம்பிக்கும்.
இளம் இலைகளின் கிளை நரம்புகள் வெளியெ தெரிந்து இலைக்காம்பு உதிர ஆரம்பிக்கும். விளை நிலங்களில் கீழ் இலைகள் முதலில் மஞ்சள் நிறமாக மாறும் மற்றும் சிற்றிலைகள் கருகி இறந்துவிடும்.
அறிகுறியின் தொடர்ச்சியாக மற்ற இலைகளுக்கும் பரவ ஆரம்பிக்கும். கடைசி நிலையில் வாஸ்குலர் அமைப்பு பழுப்பு நிறமாக மாறுகிறது. தாவர வளர்ச்சி குன்றி பின்பு இறந்துவிடும்.

மேலாண்மை :
பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும்.
கார்பென்டிசம் (0.1%) கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை மூழ்கச் செய்ய வேண்டும்.
பயிர் சுழற்சி முறையில் சாராத் தாவரங்களை அதாவது தானியங்களைப் பயிரிட வேண்டும்.

 

 

 

 

4. செப்டோரியா இலைப்புள்ளி :
அறிகுறிகள் :
தாவரம் அதன் எந்த வளர்ச்சி நிலையிலும் பாதிக்கப்படலாம். நோய் சிறிய சாம்பல் நிற, வட்ட இலைப் புள்ளிகளுக்கு மேல் இருண்ட எல்லைகளைக் கொண்டிருக்கும்.

மேலாண்மை :
பாதிக்கப்பட்ட தாவர பகுதிகளை நீக்கி அழித்துவிட வேண்டும்.
தைராம் அல்லது டிதேன் M-45 (2கி / கிலோ விதை) கொண்டு விதை சிகிச்சை அளிப்பதன் மூலம் விதை மூலம் பரவும் நோய் தொற்றைக் குறைக்கலாம்.
மேன்கோசெப் 0.2% விளை நிலங்களில் தெளிப்பதன் மூலம் திறம்பட நோயைக் கட்டுப்படுத்தலாம்.

 

 

 

 

5. பாக்டீரியா வாடல் :
அறிகுறிகள் :
தக்காளிப் பயிரில் ஏற்படும் கடுமையான நோய்களில் ஒன்றாகும். ஒப்பீடுகையில் அதிக மண் ஈரம் மற்றும் மண் வெப்பநிலை இந்நோய்க்கு ஏதுவாக உள்ளது.
பாக்டீரியா வாடல் அறிகுறியின் தன்மை வளரும் தாவரங்களை விரைவாக மற்றும் முழுமையாக வாடச் செய்வதாகும்.
கீழ் இலைகள் வாடுவதற்க முன்பே விழுந்துவிடும்.
நோய்க் கிருமி தண்டு நாளங்களில் படையெடுத்து திசுக்களை மஞ்சள் பழுப்பு நிறமாக நிறமாற்றமடையச் செய்கின்றன.
பாதிக்கப்பட்ட தாவர பகுதியை வெட்டி சுத்தமான நீரில் மூழ்கச் செய்யும்பொழுது பாக்டீரியா வெள்ளைக் கீற்றை போல் வெளியே வரும்.
இவை காயங்கள் மண் மற்றும் இதர சாதனங்களால் பரவுகின்றன.
நாற்று நடும்பொழுது நாற்றிற்கு சேதம் ஏற்படாமல் நட வேண்டும்.
வெளுக்கும் தூளை 10 கிலோ / ஹெக்டருக்கு கொடுக்க வேண்டும்.

மேலாண்மை :
பயிர் சுழற்சியாக தட்டைப்பயறு – மக்காச்சோளம் – முட்டைக்கோஸ், வெண்டை – தட்டைப்பயறு – மக்காச்சோளம், மக்காச்சோளம் – தட்டைப்பயறு மற்றும் கேழ்வரகு – கத்தரி போன்றவற்றை பயிரிடுவதன் மூலம் தக்காளியில் பாக்டீரியா வாடல் நோயைக் குறைக்கலாம்.

 

 

 

6. பாக்டீரியா இலைப்புள்ளி :
அறிகுறிகள் :
ஈரமான வானிலை மற்றும் தொடர் மழை நோய் வளர்ச்சிக்கு உகந்தது. அதிக மழைப் பெய்யும் இடங்களில் திடீரென்று இந்நோய் தோன்றுகிறது.
பாதிக்கப்பட்ட இலைகள் சிறியதாக, பழுப்பு நிறமாக, நீர் தோய்ந்து, வட்டப் புள்ளியைச் சுற்றிலும் மஞ்சள் நிற வட்டம் தோன்றுகிறது.
முதிர்ந்த தாவரங்களில் முதிர்ந்த இலைகளில் தொற்று ஏற்பட்டு இலைகள் உதிர்கின்றன.
முக்கிய அறிகுறி பச்சை பழங்களில் தோன்றும்.
மத்தியில் உள்ள காயங்கள் ஒழுங்கற்றதாகவும், வெளிர் பழுப்பு மற்றும் கடினமான சிரங்குடைய மேற்பரப்புடன் காணப்படும்.
பழுத்த பழங்கள் இந்நோயினால் பாதிக்கப்படுவதில்லை. விதையின் மேற்பரப்பில் பாக்டீரியா காணப்படும். விதையின் மற்ற பகுதிகளிலும் சில நேரம் காணப்படும்.
தாவர குப்பையிலிருந்து தானாக தக்காளிச் செடிகளுக்கு பரவுகின்றன.
மேலாண்மை :
நோயற்ற விதை மற்றும் தாவரங்களையே பயன்படுத்த வேண்டும். சாராத் தாவரங்களை பயிர் சுழற்சி மூலம் பயிரிட்டால் சென்ற வருட பயிர் சக்கைகளை தவிர்க்கலாம்.
மெர்குரிக் குளோரைடு (1:1000) கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
நோயைத் திறம்பட கட்டுப்படுத்த தாமிரம் மற்றும் உயிர்ம பூஞ்சாணக் கொல்லியை சேர்த்து 5 முதல் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் அல்லது அக்ரிமிசின் – 100 (100ppm) 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

 

 

 

 

7. தக்காளி தேமல் நோய்:
அறிகுறிகள் :
தாவரத்தில் வெளிர், பச்சை புள்ளியமைப்புடனும் மேலும் இளம் இலைகள் வெயில் நாட்களில் வாடத் தொடங்கும். இவை நோயின் ஆரம்பத் தொற்றாகும்.
பாதிக்கப்பட்ட இலைகள் உருத்திரிந்து, மடிப்புடன், அளவை விட சிறயதாக இருக்கும். சில நேரங்களில் இலைகள் “பன்னம் இலை” அறிகுறியைக் காட்டும்.
பாதிக்கப்பட்ட தாவரம் வளர்ச்சி குன்றி வெளிர் பச்சை நிறமாகிறது.
வைரஸ் ஆடைகள், கைகளால் வேலை செய்யும் ஆட்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள் பாதிக்கப்பட்ட செடியை கையாண்டுவிட்டு அல்லது தாவர குப்பைகளைக் கையாளும்பொழுது பரவுகிறது.

மேலாண்மை :
விதைப்பிற்கு நோயற்ற ஆரோக்கியமான செடிகளின் விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
விதைகளை விதைப்பதற்கு ஒரு நாள் முன்பு டிரைசோடியம் பாஸ்பேட் (90கி / ஒரு லிட்டர் தண்ணீர்) கரைசலில் ஊற வைப்பதன் மூலம் நோயைக் குறைக்கலாம்.
விதைகளை நன்கு அலசி நிழலில் உலர்த்த வேண்டும். பண்ணையில் பாதிக்கப்பட்ட தாவரங்களை கவனமாக அகற்றி அழித்துவிட வேண்டும். வைரஸ் நோய் தொற்று கொண்ட நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்த கூடாது.
புகையிலை, உருளைக்கிழங்கு, மிளகாய், குடைமிளகாய், கத்தரி போன்றவற்றை தவிர மற்ற பயிர்களை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

 

 

 

8. இலை சுருட்டை நோய்:
அறிகுறிகள் :
புதிதாக வளரும் தக்காளி செடியின் மஞ்சள் இலைகள் சுருண்டு தாவரத்தின் வளர்ச்சி குறைந்துவிடும்.
புதிய இலைகள் அளவில் குறைந்து சுருங்கி, நரம்புகள் மஞ்சள் நிறமாகிவிடும். இலைகள் மேல் நோக்கி சுருண்டு பார்ப்பதற்கு கிண்ணம் போல் இருக்கும்.
மலர்கள் தோன்றும் ஆனால் காய் பிடிப்பதற்குள் உதிர்ந்துவிடும்.

மேலாண்மை :
மஞ்சள் ஒட்டும் பொறியை வெள்ளை ஈக்களை கண்காணிக்க 12/ஹெக்டர் என்ற அளவில் வைக்க வேண்டும்.
விளை நிலங்களைச் சுற்றி வேலிப் பயிராக தானிய வகைகள் பயிரிட வேண்டும்.
களைகளை நீக்க வேண்டும்.
நாற்றுகளை வலை கூடாரம் அல்லது பசுமை கூடாரத்தில் பாதுகாக்க வேண்டும்.
இமிடா குளோரைடு 0.05% அல்லது டைமெதோட் 0.05% ஐ நடவு முடிந்து 15, 25, 45 ஆகிய நாட்களில் தெளித்தால் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

 

 

 

 

9. தக்காளி புள்ளி வாடல் நோய் :
அறிகுறிகள் :
இலைகள், தண்டு மற்றும் பழங்களில் கோடுகள் காணப்படும்.
சிறிய, கருப்பு, வட்ட புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றும்.
இலைகள் அடர் பழுப்பு நிறமாக மாறுகின்றன.
பழங்களில் அரை அங்குல விட்டம் அளவிற்கு பல புள்ளிகள் காணப்படும். பழுத்த பழங்களின் கழுத்துப் பகுதியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாகின்றன.
புள்ளி வாடல் வைரஸ் செடிப்பேன் மூலம் பரவுகின்றன.

மேலாண்மை :
பாதிக்கப்பட்ட செடிகளை நீக்கி அழித்துவிட வேண்டும்
பிற ஊள் வழங்கிளை நீக்குவதன் மூலம் வைரஸை குறைக்கலாம்.
வேலிப் பயிர்களை அதிகரிக்கலாம். தக்காளி விதைப்பதற்கு முன் விளைநிலங்களைச் சுற்றி சோளம், மக்காச்சோளம், கம்புப்பயிர் போன்றவற்றை 5-6 வரிசைகள் நடவு செய்யலாம்.
இமிடா குளோரைடு 0.05% அல்லது ஊடுறுவும் பூச்சிக் கொல்லிகளை தெளித்து வைரஸை கட்டுப்படுத்தலாம்.

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories