*தக்கை பூண்டு பற்றிய தகவல்கள்*
🐇அனைத்து வகையான மண்ணில் வளரக் கூடிய தாவரம்.பல ஆண்டுகளாக மண் வளத்தை மேம்படுத்தும் பசுந்தாள் உரமாக பயன் படுகிறது.
🐢வறட்சி தாங்கி வளரும். எந்த தாவரமும் வளராத களர் மண்ணில் கூட சாதாரணமாக வளரும். மழை பெய்யும் காலங்களில் வளர்ச்சி வெகு வேகமாக இருக்கும்.
🐱ஏக்கருக்கு பன்னிரண்டு முதல் பதினைந்து கிலோ விதைகள் தேவை. இதனை அதிகமாக நெல் பயிரிடும் விவசாயிகள் விளைநிலம் காலியாக இருக்கும் போது விதைத்து விடுகின்றனர்.
🐃 ஐம்பது நாளில் கிட்டத்தட்ட ஐந்து அடி உயரம் வரை வளர்ந்து பூ விட்டு பிஞ்சு வர ஆரம்பிக்கும் சமயத்தில் மடக்கி உழுதுவிட வேண்டும்.
🐐அதற்கு மேல் தாமதித்தால் தண்டு நார் பிடித்துவிடும். இதனால் இயந்திரம் கொண்டு உழும் போது துண்டாகாமல் சிக்கி கொள்ளும்.
🐯இதையே தொண்ணூறு நாட்களுக்கு மேல் விட்டு வைத்தால் காய்கள் நன்கு முற்றி விதைகளை அறுவடை செய்யலாம். பல விவசாயிகள் அரசு வேளாண்மை துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் விதைகளை விற்பனை செய்கின்றனர்.
🐉இவற்றை மண்ணில் மடக்கி உழும் போது
1.களர் தன்மை மாறுகிறது. தொடர்ந்து விதைப்பதால் களர் தன்மை முற்றிலும் மாறும்.
2.மண் பொலபொலப்பு தன்மை அடைகிறது.
3.மண்ணில் கரிம சத்து அதிகரிக்கும்.
🐄4.மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும்.
5.மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும்.
6.மண்ணில் நுன்னுயிர்கள் வெகுவாக மற்றும் வேகமாக பெருகும். மண் புழுக்கள் எண்ணிக்கை உடனே உயரும்.
7. வேர் முண்டுகளில் உள்ள தழைச்சத்தை நிலை நிறுத்தும் நுன்னுயிர்கள் மூலம் தழைச்சத்து மண்ணில் சேமிக்க படுகிறது .
🐂குறிப்பாக கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக அமையும். அதிக புரோட்டீன் .அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புகள் கிடைக்கும். அதிக பால் கொடுக்கும். ஆடுகள் மற்றும் முயல்கள் நன்கு உண்ணும்.
🐪இதனுடன் சின்ன சோளம் .கம்பு இவற்றை தலா மூன்று கிலோ உடன் கலந்து அளிப்பதன் மூலம் மண் நன்கு வளப்படும்.
காரணம் இவை இரண்டின் வேர்களில் இயற்கையாகவே உள்ள வேம் என்னும் வேர் பூஞ்சானம்
சேறு கலந்து நெல் நாற்று நடும் வயல்களில் இதை விதைத்து உழுது நாற்று நடுவது சிறப்பு.
*நன்றி*
Sridhar Chennai.