தசகவ்யாதயாரிக்கும்முறை

தசகவ்யாதயாரிக்கும்முறை
மாட்டினுடைய ஐந்து பொருட்களை கொண்டு தயாரிப்பது பஞ்சகவ்யா எனப்படும்.
அதே போல 10 பொருட்களை வைத்து தயாரிப்பது தசகவ்யா எனப்படும்.
தசகவ்யாவின் பயன்கள்
தசகவ்யா என்பது ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுவது மட்டுமல்லாது பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களையும் கொடுக்கவல்லது.
30 வகையான நுண்ணுயிரிகள் உள்ளது
பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களையும் தடுக்கக்கூடியது
பயிர்கள் ஓரே சீராக வளரும்
பூக்கள் உதிராது, காய்களின் எண்ணிக்கை கூடும்.
காய்கனிகள் விரைவில் கெட்டுப்போகாமல் சில நாட்கள் பாதுகாக்கும்
மண்ணின் தன்மை மாறுபடும் மண் பொதுபொதுப்பாக இருக்கும்
மண் வளம் நன்றாக இருந்தால் பயிரினுடைய வேர் வளர்ச்சி அதிகரிக்கும்
காய்கனிகளின் சுவை கூடுதலாக காணப்படும்
காய்களிகள் பசுமை மாறாமல் பளபளப்பாக காணப்படும்.
உரச் செலவைக் குறைக்கும் மகசூல் 30 சதம் கூடும்
சுற்று சுற்று சூழல் பாதுகாக்கப்படும்
தசகவ்யா தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்
தசகவ்யா 20 லிட்டர் தயாரிக்க
சாணம் 5 கிலோ
நெய் 500 மில்லி
தயிர் 2 லிட்டர்
பால் 2 லிட்டர்
கோமியம் 3 லிட்டர்
இளநீர் 2 லிட்டர்
திராட்சை சூஸ் 1 லிட்டர் (திராட்சை 2 கிலோ பழம்)
வாழைப்பழம் 12
நாட்டுச் சர்க்கரை அரைக் கிலோ
கடலைப் புண்ணாக்கு 500 கிராம்
தேன் 100 மில்லி
கள் 1 லிட்டர்
தேவை கேற்ப சிறிதளவு தண்ணீர்
தயாரிக்கும் முறை
முதல் படி
5 கிலோ சாணத்தில் அரை லிட்டர் நெய்யை ஊற்றி நன்றாக கலந்து வைக்க வேண்டும்.
அன்றே பால் வாங்கி காய வைத்து லேசாக சூடு இருக்கும் சமையத்தில் உரை ஊற்றி வைக்க வேண்டும்.
இரண்டாம் படி
வாழைப் பழத்தின் தோலை உறித்தி ஒரு பிளாஸ்டிக் வாளி அல்லது மண் பானையில் போட்டு நன்றாக பிசைந்து விடவும் பிறகு மேலே உள்ள அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்து விட வேண்டும்.
மூன்றாம் படி
நாம் கரைத்து வைத்துள்ள கலவையில் சாணக் கலவையை சேர்த்து திரும்பவும் நன்றாக கரைத்து விடவும். அனைத்து கலவையும் ஒன்றாக கரைத்த பிறகு தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் ஒரு குச்சி கொண்டு நன்றாக கலக்கி விடவும். 15 நாட்களில் தசகவ்யா தயார் நிலையாகி விடும் பிறகு இவற்றை வடிகட்டி பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
பயிர்களுக்கு பயன்படுத்தும் அளவு
பத்து லிட்டர் தண்ணீருக்கு தசகவ்யா 200 மில்லி என்ற விகிதத்தில் கலந்து பயிர்களுக்கு காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கலாம்.
இரசாயன மருந்துகள் தெளிக்க தேவையில்லை அவ்வாறு தெளித்திருந்தால் 15 நாட்கள் இடைவெளி விட்ட பிறகு தெளிக்க வேண்டும்.
பயிர் நடவு செய்து இரண்டு இலைகள் இருக்கும் சமையத்திலிருந்தே தெளிக்கலாம்.
15 நாட்கள் இடைவெளி விட்டு தொடர்ந்து தெளித்து வரலாம்.
விதை நேர்த்தி செய்யலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற அளவில் விதையில் ஊற்றி கலந்து அரை மணிநேரம் நிழலில் உலர்த்தி பிறகு நடவு செய்யலாம்
நாற்று நேர்த்தி செய்யலாம், எருவில் கலந்து ஊட்மேற்றி வயலுக்கு எடுத்து போடலாம், இலைவழி உரமாகவும் தெளிக்கலாம்.
தசகவ்யா தயாரிக்க பயன்படுத்தும் பொருள்களின்
பயன்கள்
பசுமாட்டு சாணம்
நுண்ணுயிர் சத்துக்கள் உள்ளன. மண்ணை வளப்படுத்தும்
பசுமாட்டு சிறுநீர்
பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்துக்கள் 51 சதவீதம் உள்ளது. பூச்சி விரட்டியாக செயல்படுகின்றது.
பால்
சுண்ணாம்பு சத்து உள்ளது.
நெய்
வைட்டமின் ஏ, பி, கால்சியம் கொழுப் புச்சத்துக்கள் அடங்கி உள்ளன.
தயிர்
நுண்ணுயிர்கள் உள்ளதால் நொதிக்கும் தன்மை ஏற்படுத்துகின்றது
தேன்
குளுக்கோஸ் உள்ள நுண்ணுயிர் வளர்ச்சி ஊக்கி
இளநீர்
சைட்டோசைக்கிளின் எனும் வளர்ச்சியும் மற்ற தாது சத்துக்கள் உள்ளது. பயிர் மகசூலை அதிகரிக்கச் செய்கின்றது. பயிர் வளர்ச்சி ஊக்கி
கள், திராட்சை
தாது உப்புக்கள் உள்ளது
வாழைப்பழம்,
நொதிப்புத் திறனை அதிகரிக்கச் செய்து நுண்ணுயிர்களை பெருக்கமடையச் செய்கின்றது பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல் படுகிறது
நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம்
அனைத்துப் பொருட்களையும் எளிதில் நொதிப்பு தன்மையடையச் செய்கின்றது. நுண்ணுயிர் பெருக்க மடைய பயன்படுகின்றது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories