தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் பூச்சிகட்டுபாட்டை குறைக்கவும் சில வழிகள்
சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள்
தேவையான நேரத்தில் தேவையா இடத்தில் தேவையான அளவு உரம் கொடுக்கலாம், குறைந்த தண்ணீரை வைத்து அதிக பரப்பளவில் தண்ணீர் பாய்ச்சலாம், செலவும் குறைந்த செலவு
களைகள் அதிகம் வர வாய்ப்பிள்ளை> போடக்கூடிய உரங்கள் வீனாகாமல் பயிருக்கு கிடைக்கும்> தண்ணீர் பாய்ச்ச ஆட்கள் செலவு மிச்சம்
மல்சிங் சீட்டின் பயன் நீர் ஆவியாகாது, ஈரத்தை தக்க வைத்துக்கொள்ளும் களைகள் அதிகம் வராது
பூச்சிகட்டுபாட்டை குறைக்க சில வழிகள்
விளககுப்பொறி ஒரு ஏக்கருக்கு ஒரு இடத்தில் வைக்கலாம் .
பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை அழிக்கலாம்
இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 5 இடத்தில் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி என்ற விகிதத்தில் அடித்து பூச்சிகளின் விரட்டலாம். தாவர இலைச்சாறு உடனடியாக தேவை என்றால் ஒடித்தால் பால்வரக்கூடிய இலைகள்> ஆடு மாடு திங்காத இலைகள்> கசப்புத்தன்மையுள்ள இலைகள் இது போன்ற இலைகளை குறைந்தது ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்து இடித்து அவை முழ்கும் அளவு கோமியம் சேர்த்து ஒரு டிரம்மில் ஊறப்போட்டு இரண்டு நாட்கள் கழித்து பயன்படுத்தலாம் அல்லது உடனடியாக தேவை என்றால் இலைகளை வேகவைத்து சாறு எடுத்து பயன்படுத்தலாம் இவை பூச்சியை கொல்லாது. பூச்சியை விரட்டும்