தமிழ்நாட்டில் “ஊட்டி ஏலக்காய் டீ”-யை அறிமுகபடுத்தும் இண்ட்கோசர்வ்!

நீலகிரியில் உள்ள 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் ஆலோசனைக் குழுவான இண்ட்கோசர்வ், தமிழ்நாட்டில் தேயிலை பிரியர்களுக்கு புதிய சுவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இண்ட்கோசர்வ் இப்போது ஏலக்காய் சுவை கொண்ட தேயிலையை நியாயமான விலையில் தங்கள் சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்க முடியும் எனவே,

இந்த ஏலக்காய் தேயிலை எங்களின் முதன்மை பிராண்டான “ஊட்டி” தேயிலையுடன் விரைவில் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும். கூடிய விரைவில் மேலும் பல வகை சுவைகளும் இதில் சேர்க்கப்படும் என தமிழக அரசின் முதன்மை செயலாலரும், இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார் இதில்,

“வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நாபார்ட்)-ன் சேர்மேன் ஜிஆர்.சின்தலா இண்ட்கோசர்வ் உருவாக்கிய “Ooty Tea” App-ஐ அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் தேயிலை பொருட்கள் மற்றும் சரக்கு நிலையை மதிப்பீடு செய்ய உதவும் என்றார்.

மேலும், அனைத்து பொது விநியோக அமைப்பு இடங்களிலும் விற்பனையை அதிகரிக்க, நாங்கள் இந்த மொபைல் ஆப்-ஐ பயன்படுத்துவோம்,” என்றும் சின்தாலா கூறினார். சுமார் 30,000 சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் வசதிக்காக ”INDCO@TEA’ என்ற பெயரில் மற்றொரு ஸ்மார்ட்போன் ஆப்பையும் நாங்கள் தொடங்கினோம், தேயிலைகளின் விலை, அவர்களுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பளவுகள், கள நடைமுறைகள் மற்றும் வானிலை போன்ற சரியான நேர தரவுகளுடன் எந்நேரமும் இந்த ஆப் செயல்படும் என்றும் ஜி.ஆர்.சின்தாலா கூறினார்.

இண்ட்கோசர்வின் முயற்சிகளை அங்கீகரித்த சிந்தாலா, இது இந்த தருணத்தின் தேவை, ஏனெனில் இது உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவும். விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவுவதற்கும், பண்ணையிலிருந்து தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும் நபார்ட் கவனம் செலுத்தும் என்றார்.

இந்த புதிய முயற்சிகளுக்கான இண்ட்கோசர்வின் ஆலோசகரும் குழுத் தலைவருமான சீனிவாசன் ஸ்ரீராம், விவசாயிகளின் நிலைத்தன்மையை அதிகரிக்க இது எவ்வாறு உதவும் என்பதை விவரித்தார், இந்த ஆப்-களின் தொழில்நுட்ப அம்சங்களையும் கூறினார்.

இந்த ஆப்-ஐ நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, இண்ட்கோசர்வ் தலைவர் சிவகுமார், பொது மேலாளர் எம்.அக்பர் மற்றும் துணை பொது மேலாளர் சங்கரநாராயண பிள்ளை ஆகியோர் மற்றும் விவசாயிகள் பலர் உற்சாகப்படுத்தினர்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories