அஸ்வினி சாறு உறிஞ்சும் பூச்சி வகையை சேர்ந்தது. வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இலைகளின் மேல் காணப்படு இவ்வகைக் தொகைக்கு ஏற்பவும் நிறத்தில் சிறிய மாற்றம் இருக்கும் இளம் தளிர்கள் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இலையின் அடிப் பாகத்திலும் குருத்து பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாக காணப்படும். இலை சாற்றை உறிஞ்சுவதால் தாக்கப்பட்ட இளங்குருத்து மற்றும் இலைகள் சிறுத்தும் சுருங்கியும் வளைந்தும் காணப்படும்.
பயிர் வளர்ச்சி குன்றி காணப்படுவதோடு பூச்சிகளின் வயிற்றுப் பகுதியில் இருந்து சுரக்கும் தேன் போன்ற திரவத்தை இலைகளின் மேல்பரப்பில் பூஞ்சான வளர்ச்சி தென்படும். இதனால் எறும்புகளின் நடமாட்டம் தாக்கப்பட்ட செடிகளில் அதிகமாக காணப்படும். வேர் பகுதியை தாக்கும் அஸ்வினியின் உண்டு உதாரணமாக வாழையில் வேர் கிழங்கில் அஸ்வினி காணப்படும்.
இப்பூச்சிகளின் குட்டி போட்டது முட்டிபோட்டு இனப்பெருக்கம் செய்யும் வகையாகும். இதன் வாழ்நாள் 21 நாட்களாகும். பெண் பூச்சிகள் பிறந்த ஏழாம் நாளில் ஆண் பூச்சியின் துணையில்லாமல் குட்டியிடும். ஒரு நாளில் 40 குஞ்சுகள் வரை இடும்.ஏழாவது நாளில் தொடங்கி இறக்கும்வரை குஞ்சுகளிடம் பொறி வண்டுகள் அஸ்வினியை உண்டு அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது .மேலும் மழைபொழியும் போதும் இந்த பூச்சி பெரிதளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.