புல் வகை சாகுபடி!
புல்வகை சாகுபடியில் கம்பு நேப்பியர் ,கோ4, கோ5, கினியா புல், நீர்புல் , கொழுக்கட்டை புல் போன்றவை அடங்கும்.
கம்பு நேப்பியர்!
கம்பு நேப்பியர் புல் நடவு செய்ய ஏக்கருக்கு 13 ஆயிரம் விதைக் கரணைகள் தேவைப்படும்.
இதனை 60 x 50 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம்.
இந்த ரக பயிர்களை விதைத்த 75 நாட்கள் முதல் அறுவடை செய்யலாம்.
இதன் மூலம் வருடத்திற்கு 160 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.
கினியா புல்
கினியா புல் நடவு செய்ய ஏக்கருக்கு 16 ஆயிரம் விதைக் கரணைகள் தேவைப்படும்.
இதனையும் 5ox5o சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம்.
இந்த ரக பயிர்களை விதைத்து 75 நாட்கள் முதல் அறுவடை செய்யலாம்.
இதன் மூலம் வருடத்திற்கு 150 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.
நீர்போல்!
நீருக்குள் நடவு செய்ய ஏக்கருக்கு 16 ஆயிரம் விதைக் கரணைகள் தேவைப்படும்.
இதனை 50x 50 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம்.
இந்த ரக பயிர்களை விதைத்த 25 நாட்கள் முதல் அறுவடை செய்யலாம்.
இதன் மூலம் வருடத்திற்கு 65 முதல் 70 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.
கொழுக்கட்டை புல்!
கொழுக்கட்டை புல் நடவு செய்ய ஏக்கருக்கு 3.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
இதனையே 50 x50 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம்.
இந்த ரக பயிர்களை விதைத்த 70 நாட்கள் முதல் அறுவடை செய்யலாம்.
இதன் மூலம் வருடத்திற்கு 16,000 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.
பயறு வகை சாகுபடி!
பயறு வகை சாகுபடி குதிரை மசால்,வேலி மசால், முயல் மசால், தட்டைப் பயறு போன்றவை அடங்கும்.
குதிரை மசால்!
குதிரை மசால் நடவு செய்ய ஏக்கருக்கு 6 முதல் 8 கிலோ விதைகள் தேவைப்படும்.
இந்த ரக பயிர்களை விதைத்து 60 நாட்கள் முதல் அறுவடை செய்யலாம்.
இதன்மூலம் வருடத்திற்கு 35 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.
வேலி மசால்!
வேலிமசால் நடவு செய்ய ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும்.
இந்த ரக பயிர்களை விதைத்தால் 80 நாட்கள் முதல் அறுவடை செய்யலாம்.
இதன்மூலம் வருடத்திற்கு 50 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.
முயல் மசால்!
முயல் மசால் நடவு செய்ய ஏக்கருக்கு 4 கிலோ விதைகள் தேவைப்படும்.
இதனை 3ox15 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம்.
இந்த ரக பயிர்களை விதைத்தால் 75 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம்.
இதன்மூலம் வருடத்திற்கு 12 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.
தட்டைப்பயறு!
தட்டைப்பயறு நடவு செய்ய ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும்.
இதனை 3ox15 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம்.
இந்த ரக பயிர்களை விதைத்து 50 நாட்கள் முதல் அறுவடை செய்யலாம்.
இதன்மூலம் 12 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.