துளசி செடி விதைகளை எப்படி விதைக்க வேண்டும்?

துளசி விதை அளவில் மிகச்சிறிய. எனவே நாற்றங்காலில் துளசி விதைகளை மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.

15 அடி அகலம்,4 அடி நீளம் கொண்ட பாத்திகளில் ஏக்கருக்கு 150 கிராம் விதைகளை தூவி தண்ணீர் விட்டு ஏழு வாரங்களுக்கு பிறகு வளர்ந்த நாற்றைப் பிடுங்கி நடுவதற்கு பயன்படுத்தலாம்.

பட்டு கூடுகளை எப்பொழுது அறுவடை செய்ய வேண்டும்?

பட்டுப்புழு கூடு கட்டிய 5 முதல் 7 நாட்களுக்குள் அறுவடை செய்யவேண்டும். அறுவடை முடிந்த பிறகு புழுவின் கழிவுகளும் ஒட்டியுள்ள கூடுகள் இரட்டைக் கூடுகள், நலிந்த கூடுகள் ஆகியவற்றை பிரித்துவிட வேண்டும்.

கல் மூடாக்கு என்றால் என்ன?

இலை, தழை, சருக்குகள் இல்லாத இடத்தில் உயிர் மூடாக்கு வளர்க்க முடியாத இடத்தில் அங்கு கிடைக்கும் கற்களை கொண்டு மரக்கன்றுகளுக்கு மூடாக்கு இடலாம் இதற்கு கல் மூடாக்கு என்று பெயர்.

இவ்வகை மூடாக்கு மண்ணிலிருந்து ஈரம் ஆவியாவதை தடுக்க நிலத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கிறது.

தென்னையை நடவு செய்ய ஏற்ற பருவம் என்ன?

ஆடி மற்றும் தை பட்டங்களில் நடவு செய்யலாம் மற்றும் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கும் மாதங்களிலும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகும் நடுவது மிகச் சிறந்தது.

கன்றுகளை எவ்வளவு நாட்கள் வரை பால் குடிக்க அனுமதிக்கலாம்?

கன்றின் முதல் வார வயதில் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறைகளும் அவற்றின் 90 வார வயது வரை அவற்றுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறைகளும் பாலை அளிக்க வேண்டும்.

கன்றுகளின் உடல் எடைக்கு ஏற்றவாறு அவற்றுக்கு பாலை அளிக்க வேண்டும். முதல் மாத வயதில் அதிகப்படியாக பாலை கன்றுகளுக்கு அளிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories