தூய்மையான கருப்பட்டியை எப்படி அறிவது?
தூய்மையான கருப்பட்டியை எளிதாக உடைக்க முடியும் மேலும் அதனுடைய சுவை அதிக இனிப்பு தன்மை இல்லாமல் சற்று உவர்ப்பு கலந்த இனிப்புச் சுவையாக இருக்கும்.தொடும் போது சற்று அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இருக்கும்.
விவசாயிகளின் மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
விவசாயிகளின் மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைக்க சிட்டா ,அ டங்கள், நிலவரைபடம் ,ரேஷன் கார்டு நகல் ,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சிறு குறு விவசாயிகள் என்றாலும் சான்றிதழ் ஆகியவற்றுடன் அருகிலுள்ள தோட்டக்கலை துறையை அணுக வேண்டும்.
நெல்லுக்கு என்ன உரம் இடலாம் எப்படி இடலாம்?
ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா திரவ நுண்ணுயிரிகளை ஒவ்வொன்றும் 200 மில்லி லிட்டர் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் நான்கு தூளாக்கப்பட்ட 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடலாம்.
மேலும் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனஸ் எதிர் உயிர் பூசாணத்தையும் 10 கிலோ தொழு உரம் 10 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவி விட வேண்டும்.
பட்டுப்புழு வளர்ப்பில் நாம் கவனிக்க வேண்டியது என்ன?
பட்டுப்புழு வளர்ப்பில் பிளாசரி நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த வாடிய இலையை பட்டு புழுக்களுக்கு உணவு கொடுக்கக்கூடாது.
மண், தூசி ,படிந்த இலைகளை உணவாக கொடுக்காமல் தூய்மையான இலைகளை அளிக்க வேண்டும்.
புழு வளர்ப்பு அறையில் சரியான காற்றோட்ட வசதி ஏற்படுத்த வேண்டும் அங்கு வெப்பநிலை குறைவாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்,
தீவனம் மற்றும் பசுந்தீவனம் அளிக்கும்போது வீணாகாமல் பாதுகாப்பது எப்படி?
தீவனங்களை குருணைகளாகவும் சிறு உருண்டைகளாக மாற்றி அளிக்க வேண்டும் தவிடு போன்ற உணவுகளை அளிக்கும்போது சிறிது தண்ணீர் தெளித்து அளிப்பதன் மூலம் தீவனம் வீணாவதை தடுக்கலாம்.
குறிப்பாக ஆடுகளுக்கு தீவனங்களையும் உயர் பகுதியில் வைத்து அளிப்பதன் மூலம் தீவனமும் விரயமாதல் தவிர்க்கப்படும்.
தீவனப் புற்களை சிறு துண்டுகளாக நறுக்கிய அளிப்பதன் மூலமும் தீவன விரயத்தை குறைக்கலாம்.