தென்னந்தோப்புகளில் ஈரப்பதத்தை எவ்வாறு எவ்வாறு சேமிப்பது?

தென்னந்தோப்புகளில் ஈரப்பதத்தினை சேமிக்க தேங்காய் மட்டைகளை அல்லது மக்கிய தென்னை நார் கழிவுகளை நிலபோர்வையாக வட்ட பாத்திகளில் இடவேண்டும்.

தென்னை மரங்களில் உள்ள காய்ந்துபோன தேவையற்ற மட்டைகளை வெட்டி விட வேண்டும். அதிகமான நீரை மண்ணிலிருந்து உறிஞ்சி இலைகளின் வழியே வெளியேறுவதை தடுக்க முடியும்.

மண்புழு உர உற்பத்திக்கு பயன்படக்கூடிய மண் புழுக்கள் என்னென்ன?

மண்புழு உர உற்பத்திக்கான நிலப்பரப்பின் மேல் வாழக்கூடிய மண்புழு மட்டுமே உபயோகிக்கப்படுகிறது.

ஆப்பிரிக்கன் மண்புழு (யூடிரில்லஸ் யூ ஜினியே ,சிவப்பு மண்புழு எயிஸினியா போடிட ,மட் க்கும் மண்புழு பெரியானிக்ஸ் எஸ்சவேஸ் போன்றவை மண்புழு உர உற்பத்திக்கான சிறப்பு மண்புழுக்கள் ஆகும்.

விவசாயத்தில் சூடோமோனஸ் இதன் பயன் என்ன?

சூடோமோனஸ் என்பது பூஞ்சாண கொல்லியாகும். இது விதை மூலம் உண்டாகும் பயிர்களில் ஏற்படும் இலைப்புள்ளி நோய் ,வாடல் நோய், வேர் அழுகல் மற்றும் இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கவும்,சில நூர் புழுக்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக சூடோமோனாஸ் விளங்குகிறது.

கவாத்து செய்தல் என்றால் என்ன?

கவாத்து என்பது ஒரு பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்தும் முறையாகும். கவாத்து மரம் மற்றும் செடிகளுக்கு பொதுவான ஒன்று.

கவாத்து செய்வதன் மூலம் புதிய கிளைகள் மற்றும் பூ மொட்டுகளை துளிர்க்க செய்யமுடியும்.

இதனால் அதிக அளவில் புதிய கனிகள் மற்றும் மலர்கள் பெறமுடியும்.

கன்றுக்குட்டிக்கு எட்டு மாதம் ஆகியும் சரியான வளர்ச்சி இல்லை அதற்கு என்ன காரணம்?

குடற்புழு மருந்து கொடுக்கலாம் அல்லது ஒரு கிலோ எலுமிச்சை இலையை இரண்டு லிட்டர் நீரில் சீரகம் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து கொடுக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories