தென்னைக்கு உரமிடும் முறை
தென்னை மரத்திலிருந்து, 1.50 மீட்டர் முதல், 2 மீட்டர் வரையிலான பகுதியில் உள்ள வேர்கள், அதிக உறிஞ்சும் திறன் கொண்டதாக இருக்கும். எனவே, மரத்தில் இருந்து,2 மீட்டர் தொலைவில், ஒரு அடி ஆழத்தில், அரைவட்ட வடிவில் குழி எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்ச வேண்டும். நுண்ணூட்ட சத்து கலவை மற்றும் உயிர் உரங்களை, தேவையான அளவு, தொழு உரத்துடன் கலந்து, தனியே இடலாம்.
ஒரு மரத்திற்கு அடியுரமாக
தொழுவுரம் ஒருகிலோ
ஜிப்சம் ஒரு கிலோ
மண்புழு உரம் அரைக்கிலோ கொடுக்கலாம்.
இயற்கை உரம்
அசோஸ்பைரில்லம் 25 கிராம்
பாஸ்போபாக்டீரியா 25 கிராம்
பொட்டாஷ்; பாக்டீரியா 25 கிராம்
வேம் 500 கிராம் இடலாம்
இரசாயன உரம் கொடுப்பது என்றால்
யூரியா 650 கிராம்
சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ
பொட்டா ஷ் 1 கிலோ கொடுக்கலாம்
நுண்ணுரம்
மெக்னீசியம் 500 கிராம்
போரான் 50 கிராம்
தென்னை நுண்ணுரம் 25 கிராம் என்ற அளவில் ஒரு மரத்திற்கு இடவேண்டும்