தென்னைக்கு டானிக்கை வேரின் மூலம் செலுத்தும் முறை

தென்னைக்கு டானிக்கை வேரின் மூலம் செலுத்தும் முறை
தென்னைக்கு வளர்ச்சி டானிக்கை கட்டுவதன் மூலம் கிடைக்கும் பயன்கள்
தென்னை டானிக்கை கட்டிய 6 மாதத்தில் இலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
இலைகளில் பச்சையம் கூடுதலாக காணப்படும்
தென்னம் பாளைகள் அதிகமாக போடும்
குரும்பைகள் உதிர்வதை தடுக்கும்
சொறிக்காய்கள் தோன்றாது
காய்கள் பெரியதாகவும் பருப்பின் எடை தடிமனாகவும் இருக்கும்
பூச்சி நோய் தாக்காது ( எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்)
மகசூல் கூடும்
எண்ணெய் சத்து அதிகரிக்கும்
தென்னைக்கு வளர்ச்சி டானிக்கை பயன்படுத்தும் முறை
தழிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தோட்டக்கலைக் கல்லூரி; மற்றும் ஆராய்ச்சி
நிலையம் பெரியகுளம் – கோவையில் தென்னைக்கு வளர்ச்சி டானிக்கை உள்ளது
தென்னை வளர்ச்சி டானிக்கை வாங்கி வந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற விகிதத்தில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்
ஒரு மரத்திற்கு நாம கலந்து வைத்துள்ள டானிக்கையில் 200 மில்லி எடுத்து ஒரு கவரில் ஊற்றி இளம் வேரில் கட்டிவிட வேண்டும் இதேபோல அனைத்து மரத்திற்கும் கட்டலாம்
இவ்வாறு தண்ணீரில் கலந்து வைத்துள்ள டானிக்கையை 30 நாட்களுக்குள் கட்டிவிட வேண்டும்
தண்ணீரில் டானிக்கையை கலந்து வைத்துள்ளவற்றை ஒரு வாரத்திற்குள் கட்டிவிடவேண்டும்
அவ்வாறு பயன்படுத்தாவிட்டால் டானிக்கையில் உள்ள உயிரிகள் இறந்துவிடும் அவற்றின் எண்ணிக்கையும் குறையும்-
தண்ணீரில் கலக்காத டானிக்கையை தொடர்ந்து 2 வருடங்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்
தென்னை டானிக்கை மரத்திற்கும் கட்டும் முறை
தென்னை மரத்தை சுற்றி 2 அடி தள்ளி 8 செ.மீ ஆழத்தில் பரித்து பார்த்தால் வெள்ளை நிற வேர்கள் தென்படும் ( இளமஞ்சள கலந்த வெள்ளை நிறம் )
அவற்றில் பென்சில் தடிமன் உள்ள வேரை தேர்ந்தெடுத்து கத்தியின் மூலம் சாய்வாக் வெட்டிவிடனும்
வெட்டும்பொழுது வேரின் மேல் பகுதியில் காயம் படாமல் பார்த்துக் கொள்ளனும்
. டானிக்கை ஊற்றி வைத்துள்ள பாலுத்தின் கவரில் வேரை உள்ளே செலுத்தி அடிப்பகுதி சற்று உயர்வாக இருக்குமாறு காற்று புகாமல் வேரையும் பையையும் நன்றாக இருக்கி நூல் கொண்டு கட்டிவிட்டு
மண்ணால் மூடி விட வேண்டும்.
ஒரு மணி நேரத்தில் அவற்றை உறிஞ்சி விடும்.
மழைகாலமாக இருந்தால் கால தாமதம் ஆகும். அளவு கொஞ்சம் கூடினால் கூட ஒன்றும் ஆகாது..

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories