தென்னையில் உழவியல் தொழில்நுட்பங்கள்

தென்னையில் உழவியல் தொழில்நுட்பங்கள்

வளர்ச்சியடைந்த தென்னையின் வேர்ப்பகுதி அல்லது தூர் ஒரு கன மீட்டர் சுற்றளவு இருப்பதாக அளவிடப்பட்டுள்ளது. ஒரு கன மீட்டர் பரப்பளவிலிருந்து சுமார் 7000 முதல் 8000 வேர்கள் உற்பத்தியாகின்றன. இந்த வேர்ப்பகுதி முழுமையாக மண்ணின் அடியில் இருக்குமாறு நட்டு வளர்க்கப்பட்ட மரத்தின் தூர் பம்பர வடிவில் 1 கன மீட்டர் சுற்றளவு உடையதாக காணப்படும். ஆகவே 3 x 3 x 3 அடி குழிகள் தென்னங்கன்று நடுவதற்கு ஏற்றதாகும். 1 x 1 x 1 மீட்டர் ஆழத்தில் நடப்பட்ட மரங்களில் பாளைகள் 45 மாதங்களில் வெளி வருகின்றன மற்றும் மரங்களின் தண்டுப்பகுதி, அடி முதல் நுனி வரை சீராகக் காணப்படும். இவற்றின் மரங்களில் அதிகமான வேர்களும் காணப்படும். இவ்வாறு நடப்பட்ட மரங்கள் புயலினால் பாதிப்பு வராமல் நன்கு வளரும்.

தென்னை அதன் நீண்ட ஓலைகளில் காணப்படும் பச்சையத்தைப் பயன்படுத்தி சூரிய வெளிச்சத்தின் உதவியுடன் மாவுப் பொருள் தயார் செய்கின்றது. வெளிச்சம் தடைபடும்போது மரத்தின் பல்வேறு செயல்பாடுகள் நின்று போவதால் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் பூக்கள் வளர்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தியும் தடைபடுகின்றது. இதனால் பூம்பாளைகளில் பெண் பூக்களின் எண்ணிக்கை குறைவதோடு பெரும்பான்மை குரும்பைகள் வளர்ச்சி பெறாமல் உதிர்ந்து விடுகின்றன. இதனால் விளைச்சல் வெகுவாகக் குறைந்து விடுகின்றது.

ஒரு மரத்தின் காய்ப்புத் திறனை அதிகரிக்க மரத்திற்கு மரம் 25 அடி (அ) 30 அடி இடைவெளி விட்டு நட வேண்டும். இவ்வாறு அதிக இடைவெளி விட்டு நடப்படும் தோப்புகளில் 20 வருடங்களுக்குப் பின் ஊடு பயிர்களாக வாழை, கொக்கோ, அன்னாசி, குறுமிளகு, சேனைக் கிழங்கு மற்றும் தக்காளி போன்ற பயனுள்ள செடி, கொடிகளை நட்டு வளர்த்திட வாய்ப்பு ஏற்படுகின்றது.

நடவு முறை

வயலில் கன்றுகளை நடும்போது பல்வேறு முறைகள் கையாளப்படுகிறது. இம்முறைகளில் சதுர, முறையில் நடுவதே பிற்காலத்தில் ஊடுபயிர்கள் பயிரிட உதவியாக இருக்கும். வாய்க்கால் ஓரத்திலும், வரப்புகளிலும் ஒரே வரிசையில் மட்டும் தென்னை நடும்போது மரத்திற்கு மரம் 6 x 20 அடி இடைவெளியே போதுமானதாகும். பொதுவாக 7.5 மீட்டர் க்ஸ் 7.5 மீட்டர் (25 x 25 அடி) சதுர முறையில் ஹெக்டேருக்கு 175 மரங்கள் நடமுடிகின்றது.

முக்கோண, மற்றும் சதுர நடவு முறை

வயலில் கன்றுகளை நடும்போது பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. முக்கோண மற்றும் சதுர நடவு முறைகள் என்பது பொதுவாக நிலவி வரும் இரு முறைகளாகும். முக்கோண வடிவ நடவு முறையில் நெட்டை ரகத்திற்கு 25 அடி இடைவெளியும் குட்டை ரகத்திற்கு 20 அடி இடைவெளியும் விடுவது நலம். முதல் வரிசையில் கன்றுகளைத் தெற்கு வடக்கு வரிசையில் தோண்டப் பெற்ற குழிகளில் நடுவதும் 2வது வரிசையில் அவற்றை முதல் மரத்திற்கு நேராக நடாது ஒன்று விட்டு ஒன்றாக நடுவதும் வழக்கில் உள்ளது. இதனால் மரங்கள் வளர்ந்தபின் அதன் நிழல் ஒன்றின் மேல் ஒன்று விழாதபடி பாதுகாக்கப்படுகிறது. இம்முறையை அடைப்பு நடவு முறை என அழைக்கிறோம். வாய்க்கால் ஓரத்திலும் வரப்புகளிலும் ஒரே வரிசையில் மட்டும் தென்னை நடும் போது மரத்திற்கு மரம் 15 அல்லது 18 அடி இடைவெளியே போதுமானதாகும். பொதுவாக 6.7 x 22 அடி இடைவெளிவிட்டு நடும்போது முக்கோண முறையில் ஹெக்டேருக்கு 236 மரங்களும் சதுர முறையில் 204 மரங்களும் நடமுடிகின்றன. இடைவெளியை அதிகப்படுத்தி 7.5 மீட்டரில் (25 அடி) நடும்போது முக்கோண முறையில் 205 மரங்களும் சதுர முறையில் 178 மரங்களும் நடமுடிகின்றன.

மண் குவியல் நடவு முறை

தண்ணீர் தேங்கி நிற்கின்ற சதுப்பு நிலங்களில் தோப்பு அமைக்க தேவை ஏற்படும்போது குழிகள், தோண்டுவதற்கு பதிலாக 3 அல்லது 5 அடி உயர மண் குவியல்கள் அமைத்து அதன் உச்சியில் ஒரு அடி ஆழக் குழிகளில் கன்றின் காள்ப்பகுதி உள்ளே இருக்கும் படி நடப்படுகின்றது. இவ்வித நடவு முறையை குன்று நடவு என அழைக்கின்றோம். இவ்வாறு நட்டு நான்கு ஐந்து ஆண்டுகள் சென்றபின் இரண்டு கன்றுகளின் இடைவெளியில் உள்ள தண்ணீர் பகுதி மண்ணால் நிரப்பப்பட்டு 3 முதல் 5 அடி உயரம் மற்றும் அகலமுடைய பெரிய வரப்புகள் அமைக்கப்படுகின்றது. குன்றின் மேல் நடப்பட்ட கன்றுகளின் தூர் ஆழக் குழிகளில் நடப்பட்ட கன்றுகளின் தூர் போன்று மண்ணின் அடியில் புதைக்கப்படுவதால் எந்தவித பாதிப்பின்றி வளர்ந்து காய்க்கத் தொடங்குகின்றன. இதனால் காலப்போக்கில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை மாறி குன்றுகளின் மேல் நடப்பட்ட மரங்கள் அகலமான பெரிய வரப்புகளில் நின்று வளர்வது போன்ற நிலையைப் பெற்று செழிப்பாக வளர்ச்சியடைகின்றன.

கன்றுகளை நடும் முறை

நாற்றங்காலில் இருந்த கன்றுகளை பெயர்த்தெடுக்கும்போது வேர்கள் அறுபடாமலும் வடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். கன்றுகளை நாற்றங்காலில் இருந்து பெயர்த்தெடுத்தவுடன் வாடுமுன் கன்றுகளை நட்டுவிட வேண்டும். உடனடியாக நடுவதற்கென வாய்ப்புகள் இல்லாதபோது நிழல் பகுதியான இடத்தில் மணல் பரப்பில் அவற்றை தற்காலிகமாக நட்டுத் தண்ணீர் தெளித்து வருவதால் 15 நாட்கள் முதல் ஒரு சில மாதங்கள் வரை வைத்துக் காப்பாற்றலாம். மூன்றடி ஆழத்தில் தோண்டிய குழிகளின் மேல் மண்ணுடன் மக்கிய உரத்தை கலந்து ஒரு அடி ஆழம் நிரம்பும் படி இட்டு அதில் காய் பதியும்படி கன்றை நட்டுச் சுற்றியுள்ள மண் இறுகும்படி காலால் மிதித்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் விரைவில் புதுவேர்கள் விடும் வாய்ப்பு உருவாகும். காயின் பக்கவாட்டில் உள்ள மண்ணில் 2 அடி நீள குச்சி ஒன்றை ஊன்றி கயிற்றினால் கன்றையும், குச்சியையும் இணைத்து கட்டி விடுவது அவசியம். கன்று தூர் கட்டி வளரும் வரை குழியில் மண் அதிகம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நடப்பட்ட கன்று வெயிலினால் வாடி வதங்காமல் இருப்பதற்காக கை மட்டையோடு கூடிய பனை ஓலையை வைத்து மூன்று மாதங்கள் வரை நிழல் கிடைக்கச் செய்வதால் தாமதமின்றி புதிய வேர்கள் தோன்றி கன்று விரைவாக வளரும். நட்ட சில வாரங்கள் வரை பூவாளி மூலம் நனைத்து குழியில் ஈரம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வ«ண்டும்.

நீர்பாய்ச்சுதல்

நட்ட சில நாட்கள் வரை பூவாளி அல்லது குடத்தால் தண்ணீர் ஊற்றி நனைத்து வருவது அவசியம். வேர் பிடிக்க ஆரம்பித்ததும், வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு பாய்ச்சும் போது தண்ணீரால் அடித்து வந்த மண்கன்றின் அடிப்பாகத்தை மூடிவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வளருகின்ற கன்றுகளை நுண்ணுயிர்கள் மற்றும் புழு பூச்சிகள் தாக்குதலிலிருந்து காப்பாற்றலாம்.

தென்னைக்குப் போதுமான நீர் கிடைக்காமல் இருந்தால் மரத்தின் கொண்டையிலுள்ள ஓலைகள் வளைந்து தொங்கும். மீதமுள்ள ஓலைகள் இளம் மஞ்சள் நிறமாக மாறிவிடும். அதனால் உடனடியாக வரப்புகளை செப்பனிட்டு வாய்க்கால்கள் அமைத்து மண்ணில் ஈரம் கிடைக்கும்படி நீர் பாய்ச்சுவது மிகவும் அவசியம். வாய்க்காலிலிருந்து ஒவ்வொரு மரத்திற்கும் தனித்தனியே தண்ணீர் பாயும்படி திருப்பிவிட ஏற்பாடு செய்ய வேண்டும் ஒரு மரத்திற்கு பாயும் தண்ணீர் மற்றொரு மரத்திற்கு திருப்பி விடுவது தவறான முறையாகும். இதனால் உரச்சத்து ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு அடித்துச் செல்லப்படுவதோடு தீங்கு தரும் பூசாணம், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் கொண்டு செல்லப்பட்டு நோய் பரவ ஏதுவாகிறது.

நீர் பாய்ச்சும் முறைகள் நிலமெங்கம் நீர் விட்டுப் பாய்ச்சல்

தாராளமாக நீர் கிடைக்கும் பகுதிகளில் 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நிலம் எங்கும் நீரை ஓடவிட்டு பாய்ச்சும் முறை வழக்கத்தில் உள்ளது. இம்முறையில் பல நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன. நீர் பாய்ச்ச அதிக நேரம் ஆவதுடன், களை அல்லது பூசாண விதைகள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நீரினால் அடித்துச் செல்லப்பட்டு நோய் மற்றும் களை பரவ வாய்ப்புகள் உருவாகின்றன. அத்துடன் நீரில் கரையும் சத்துப் பொருட்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அடித்துச் செல்லப்படுவதால் எல்லா மரங்களுக்கும் சீரான அளவில் சத்துப் பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போகின்றன. மேலும் சத்துப் பொருட்கள் நீரில் கரைந்து வேர்ப்பகுதிகளுக்குக் கீழே செங்குத்தாகச் சென்று மண்ணில் சத்து பொருட்களின் அளவு குறைய வாய்ப்பு ஏற்படுகின்றது.

வட்டப் பாத்திகளில் நீர் பாய்ச்சுதல்

மரத்தை சுற்றிலும் 1 மீட்டர் விட்டத்திற்கு 15 செமீ அளவுக்கு மேல் மண்ணை எடுத்து வட்டமாக கரையமைத்து நீர் பாய்ச்சுதல் வேண்டும். இவ்வாறு வாய்க்காலின் இரு மருங்கிலுள்ள வட்டப் பாத்திகளில் தனித்தனியே நீர் பாய்ச்சும் முறையே வட்டப் பாத்திகளில் நீர் பாய்ச்சும் முறையாகும். இம்முறையால் நீர் பாய்ச்ச தேவைப்படும் நேரமும் நீரின் அளவும் கட்டுப்படுத்தப்படுகின்றது. இம்முறையில் நீர் பாய்ச்சும் போது நோய் கிருமிகள் மற்றும் களை விதைகள் மரத்திற்கு மரம் சென்று பரவும் வாய்ப்பு தடைபடுகின்றது.

தெளிப்பான் மூலம் நீர் பாய்ச்சுதல்

நீரை வாய்க்காலில் விட்டு பாய்ச்சாமல் குழாய் மூலம் கொண்டு சென்று தெளிப்பான்கள் மூலம் தோப்பு முழுவதும் நனையும்படி தெளிக்கும் முறையும் பழக்கத்தில் உள்ளது. இந்த முறை ஊடுபயிர் செய்யப்படும் தோப்புகளுக்கு ஏற்றதாகும். குழாய்கள் மூலம் நீர் கொண்டு செல்லப்படுவதால் குறைந்த நீர் செலவில் பல பயிர்களை இலாபகரமாக வளர்க்க முடிகின்றது.

சொட்டு நீர்ப் பாசனம்

நீர் பற்றாக்குறை உள்ள நிலங்களில் தோப்பு அமைக்க சொட்டு நீர்ப்பாசனம் என்ற புதிய முறை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நீர் சேமிப்பு திடலிலிருந்து தகுந்த குழாய்கள் மூலம் கன்றுகள் நடப்பட்டிருக்கும் குழிகளுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு எமிட்டர் எனப்படும் நீர் போக்கிகள் மூலம் சொட்டுச் சொட்டாக மண்ணில் நீர் வடியச் செய்வது இம்முறையில் சிறப்பாகும். தோப்பிலுள்ள அத்தனை மரங்களுக்கும் குறிப்பிட்ட அளவு நீரை ஒரே நேரத்திலும், ஒரே சீராகவும் பாய்ச்ச முடிவதே இம்முறையினால் ஏற்படும் சிறப்பாகும்.

தற்காலத்தில் நீர் மேலாண்மை

ஐந்தாம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகளுக்கு நீர் ஆவியாதலுக்கேற்ப கீழ்க்காயும் நீர் மேலாண்மைத் திட்டத்தை சொட்டு நீர்ப்பாசனம் அல்லது வட்டப் பாத்தி பாசனம் மூலம் கடைப்பிடிக்கலாம்.

தமிழகத்தின் மேற்குப் பகுதியில் தென்னை மரங்களுக்குத் தேவையான ஒரு நாளைய நீரின் அளவு (லிட்டரில்)

  • இணையற்ற விளைச்சலுக்கு
  • இப்கோ கனிம உரங்கள்
  • நீர் மற்றும் உரப்பயன்பாட்டுத்திறன்
  • மேம்பட முற்றிலும் நீரில் கரையும் உரங்கள்

கேள்வி பதில்

1. பெரும்பாலான தென்னை மரங்களில் குரும்பை விழுதல் அதிகமாக உள்ளது. அதனை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?

வேர் மூலம் தென்னை டானிக் செலுத்துவதன் மூலம் குரும்பை உதிர்வதைக் கட்டுப்படுத்தலாம்

2. எனது தென்னை தோப்பில் உள்ள மரங்களில் இலைகள் வெட்டுப்பட்டு காணப்படுகின்றது.

இது காண்டா மிருக வண்டு தாக்குதலின் ஏற்படும் விளைவுகள் ஆகும். இதனைக் கட்டுப்படுத்த வளரும் குருத்துப் பகுதியில் ஒரு கையளவு மணல் தூவுதல் வேண்டும. மேலும் ஒரு மண் சட்டியில் தென்னை கல்/தெளுகுடன் லிட்ருக்கு 2 மிலி மோனோகுரோட்டடோபாஸ் (அ) மீதைல் டெமட்டான் கலந்து இரவு நேரங்களில் வைப்பதன் மூலம் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம், பின் அரகிலுள்ள தொழுஉரக்கழிவு குழிகளை ன்கு கிளறி கொத்திவிடவேண்டும். அவ்வாறு செய்யும்போது கிடைக்கும் புழுகளை சுண்டு புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும்.

3. தென்னை தோப்புகளில் ஈரப்பதத்தினை சேமிக்க ஏதேனும் வழிமுறை உண்டா?

தென்னந் தோப்புகளில் ஈரப்பதத்தினை சேமிக்க தேங்காய் மட்டைகளை (அ) மக்கிய தென்னை நார் கழிவுகளை நிலப் போர்வையாக வட்டப்பாத்திகளில் இடலாம்.

4. தென்னை நாற்றுகள்/கன்றுகளைத் எவ்வாறு தேர்வு செய்யவேண்டும்?

ஒவ்வொறு நாற்றுகளிலும் குறைந்தது 6-7 இலைகள் இருக்க வேண்டும். மேலும் அதனின் விட்டம் 4 அங்குளம் (10 செ.மீ.) இருக்க வேண்டும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories