தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த

தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த
தாக்குதலின் அறிகுறி
தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதல் இருந்தால் மரத்தின் வளர்ச்சி குறையும்
தென்னை மரத்தின் குருத்து பகுதியை குடைந்து சக்கையை மட்டும் வெளியில் தள்ளி இருக்கும்.
சில மரங்களில் குருத்து பகுதி வெளி வராமல் காய்ந்து விடும். மரத்திக் அடிப்பகுதியில் மட்டை சாய்வாக வெட்டியது போல விசிறி வடிவில் காணப்படும். மரத்தின் அடிப்பகுதியில் கிளைகள் சுருண்டு காணப்படும்.
இவற்றை கட்டுப்படுத்த
தென்னை மர தோப்பில் எருக்குழிகள் போடுவதை தவிர்க்கனும்.
காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிபொறி ஒரு ஏக்கருக்கு ஒரு இடத்தில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
குத்தூசி கொண்டு குருத்து பகுதியில் குத்தி வண்டினை வெளியில் எடுத்து அழிக்கலாம்
ஆமணக்கு புண்ணாக்கு 200 கிராம் இடித்து 2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து நன்கு நொதித்த சமையத்தில் சிறிய மண் கலையத்தில் ஊற்றி தென்னந் தோப்பில் ஆங்காங்கே வைக்கலாம். புண்ணாக்கு நொதிக்கும் வாசனைக்கு வண்டுகள் வந்து விழுந்துவிடும்.
ஒரு மரத்திற்கு மெட்டாரைசியம் 10 கிராம் பிவேரியா 10 கிராம் என்ற அளவில் கலந்து குருத்துப் பகுதியில் போடவும்.
அல்லது
மணல் 2 பங்கு மாலத்தியான் டஸ்ட் ஒரு பங்கு என்ற அளவில் கலந்து குருத்துப் பகுதியில் போடலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories