தென்னையில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை

தென்னையில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை

தென்னங்கன்றுகள் வளரும் பருவத்தில் அதிகம் தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் :

🌴 குருத்தழுகல்:

மழைக்காலங்கள் மற்றும் அதிக பனிப்பொழிவு உள்ள நேரங்களில் தென்னங்கன்றுகள் ஏற்படும் குருத்து அழுகல் நோயை கட்டுபடுத்த முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யம் அல்லது சூடோமோனாஸ் திரவத்தின் லிட்டர் தண்ணீருக்கு 50 எம்எல் என்ற விகிதத்தில் கலந்து குறித்த பகுதியில் ஊற்றி விட வேண்டும். இதன்மூலம் குருத்தழுகல் நோய் எளிமையாக கட்டுக்குள் வரும்.

🌴 வேரழுகல்:

தென்னங்கன்றுக்கு தேவைக்கு அதிகமான நீர் கொடுக்கும்பொழுது அல்லது மழைக் காலங்களில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கும் பொழுது பூஞ்சைகளின் வளர்ச்சி அதிகரித்து வேரழுகல் நோய் வந்துவிடும் இதை கட்டுப்படுத்த வைரல் பேஸ்ட் அல்லது டிரைகோடெர்மா விரிடி வேர் வழியாக கொடுக்கும் பொழுது எளிமையாக வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்திவிடலாம்.

🌴 இலை கருகல்:

தென்னங்கன்றுகள் வளரும் பருவத்தில் வளர்ச்சி ஊக்கியாக மாதம் ஒருமுறை முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யத்தை தெளிப்பதன் மூலம் எளிமையாக இக்கருவியை கட்டுப்படுத்திவிடலாம்.

🌴 வாடல் நோய்கள்:
(தஞ்சாவூர் மற்றும் கேரளா)

வாடல் நோய்களுக்கு அற்புதமான ஒரே தீர்வு வைரல் பேஸ்ட் ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேர் வழியாகும் இலை வழியாகவும் கொடுப்பதன் மூலம் மிகவும் எளிமையாக வாடல் நோய்களை கட்டுப்படுத்தி விடலாம்.

🌴தென்னையைத் தாக்கும் பூச்சிகளில் அதிக சேதத்தை விளைவிக்கக்கூடியது காண்டாமிருக வண்டு (ஒரிக்டஸ் ரைனோசிரஸ்) மற்றும் சிவப்பு கூன் வண்டு (ரின்கோபோரஸ் பெரன்ஜினியஸ்)

இவைகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் விளக்குப்பொறி பயன்படுத்துவதன் மூலமும் + வயலை சுத்தமாக பராமரிப்பதன் மூலமும் எளிமையாக கட்டுப்படுத்தலாம்.

மாதத்துக்கு ஒரு முறை கன்றுகளின் குருத்துப் பகுதியை தவிர மற்ற மட்டைகளில் இடுக்குகளில் வேப்பங்கொட்டைத்தூள் மற்றும் மணலை 1:2 என்ற விகிதத்தில் கலந்து மட்டைகளுக்கு அடியில் வைக்கலாம்.

அல்லது

மணல் கல் உப்பு மஞ்சள் தூள் கலந்த கலவையை தென்னை மட்டை இடுக்குகளில் வைப்பதன் மூலமும் மிகவும் எளிமையாக கட்டுப்படுத்திவிடலாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக செய்தால் வளரும் பருவத்தில் தாக்கும் நோய் மற்றும் பூச்சிகள் எளிமையாக கட்டுப்படுத்திவிடலாம்…

நன்றி
P.சத்தீஸ் குமார் குடியேற்றம் …

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories