தென்னை மரத்திற்கு முறையான ஊட்டச்சத்துக்கள் கொடுக்க சில வழிகள் :-

தென்னை மரத்திற்கு முறையான ஊட்டச்சத்துக்கள் கொடுக்க சில வழிகள் :-

🌾 தென்னை மரங்களுக்கு அனைத்து விதமான சத்துகள் + நீர் கொடுக்க வேண்டிய இடம் அதன் குடைநிழல் பகுதியில் தரவேண்டும்.

🌾 உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் தென்னை மரத்தின் குடைநிழல்( தென்னை மரத்தின் அடி மரத்தில் இருந்து 7 அடி வெளியில் குழி) பகுதியில் ஒரு வட்ட வடிவில் குழி எடுத்து தொழுவுரம் மற்றும் அனைத்து வகையான இலை தழைகளையும் காய்ந்துபோன சருகுகள் மற்றும் குச்சிகள் இலைகளை கொடுத்து. அந்த வட்டத்தில் மட்டும் நீர் கொடுத்து வாருங்கள் சிறப்பாக நீங்கள் கொடுத்த இலை தலைகள் மற்றும் தொழுவுரம் நன்கு மக்கி அந்த தென்னை மரத்திற்க்கு ஊட்டமாக கிடைக்கும்.

🌾 சாண மூலிகை உரம் + கொம்பு சாண உரம் கரைசல் நீர் வழியாக கொடுக்கலாம் அல்லது ஒவ்வொரு முறையும் உழவு ஓட்டும் போது முன்னாள் வயல் முழுக்க தெளித்துவிட்டு உழவு ஓட்டலாம் இதன் மூலம் மண்ணில் மன்னுயிர்களின் பெருக்கம் மண் தான் இழந்த வளத்தை மீண்டும் பெறும்.

🌾உங்களுக்கு வாய்ப்பிருந்தால் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து தரலாம். கூடுதல் சிறப்பாக இருக்கும்.

🌾நீங்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய விஷயம் அந்த தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் ஓலைகள், மட்டைகள், பாலைகள், பன்னாடைகள், கொத்துகள் போன்றவற்றை துண்டு துண்டாக நறுக்கி நீங்கள் எடுத்துள்ள குழியில் இட்டு அதன் மீது தொழுவுரம் இட்டு மூடி விட்டாள் தென்னை மரத்திற்கு சிறப்பான சத்துக்கள் கிடைக்கும்

🌾ஆண்டுக்கு ஒருமுறை நிச்சயம் மீன் அமினோ அமிலம் ஒரு தென்னை மரத்திற்கு குறைந்தபட்சம் 300 ML அதிகபட்சம் 500 ML வரை தர வேண்டும். இதன்மூலம் அதற்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களை எளிமையாக நம்மால் கொடுக்க முடியும்.

🌾 நீங்கள் ஜீவாமிர்தம் அல்லது பஞ்சகவியம் அனைத்து விதமான இயற்கை இடு பொருட்களையும் பயன்படுத்தலாம் + ஆண்டுக்கு ஒருமுறை நீங்கள் நிச்சயம் மரப் பேஸ்ட் அடித்து பாருங்கள் உங்கள் தென்னையில் நல்ல மாற்றம் தெரியும்.

🌾 ஆண்டுக்கு ஒருமுறை மழைக்காலம் துவங்கும் முன் பலதானிய விதைப்பு செய்து மடக்கி உழுது விடுங்கள் இதன் மூலம் மண்ணும் வளமாகும் சிறப்பான மகசூலும் கிடைக்கும்.

நன்றி
சத்தீஷ் குமார்
குடியேற்றம் ….

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories