தென்னை மரத்தில் அணில் தொல்லையை எவ்வாறு சரி செய்யலாம்?

தென்னை மரத்தில் இரண்டு அடி உயரத்திற்கு அலுமினியத்தால் செய்யப்பட்ட வளையத்தை மரத்தைச் சுற்றிலும் அமைத்தால் அணில் மரத்தில் ஏறுவதை தடுக்கலாம்.

தேக்கு மரத்திற்கு என்ன உரம் வைக்கலாம்?

ஆறு மாதத்திற்கு ஒரு முறை களைகளை எடுத்து ஒவ்வொரு மரத்திற்கும் நான்கு கிலோ தொழுஉரம் இட வேண்டும்.

பூச்சிகளையும் கட்டுப்படுத்த தசகவ்யா அல்லது வேம்பு கரைசலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வீதம் கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பான் மூலம் தெளித்தால் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

வெள்ளரியில் புழுக்கள் அதிகம் உள்ளது அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

300 மில்லி வேப்ப எண்ணெய் 300 மில்லி புங்கம் எண்ணெய் 150 கிராம் காதி சோப்பு ஆகியவற்றை 13 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் வெள்ளரியில் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

தென்னை மரத்தில் குரும்பை அதிகமாக உள்ளது அதை எவ்வாறு சரி செய்யலாம்?

மண்புழு உரத்தை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 10 கிலோ வீதம் ஒரு மரத்திற்கு வேரில் இடவேண்டும்

ஐந்து லிட்டர் கோமியத்தில் ஒரு மரத்திற்கு மாதம் ஒரு முறையும் சமபங்கு தண்ணீருடன் கலந்து வேரில் இடுவதால் சிலந்தி தாக்குதல் கட்டுப்படுத்தப்படும் இதனால் காய்கறிகள் அதிகம் கிடைக்கும்.

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தொடர்ந்து வாரம் இரு முறை நீர்பாசனத்துடன் கலந்துவிடுவதால் அதிக மகசூல் கிடைக்கும்.

மாடுகளை கொசு கடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

புகை மூட்டுதல் செய்வதன்மூலம் கொசுக்களை விரட்டலாம்.

வேப்ப எண்ணெய் உடன் தேங்காய் எண்ணெய் கலந்து மாட்டின் உடலில் தேய்த்து விடலாம் இதனால் கொசு கடிப்பது தடுக்கலாம்.

கற்பூரவள்ளி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து தெளிப்பதன் மூலம் கொசுவை விரட்டலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories