தேனீ வளர்ப்பின் பூச்சி மற்றும் நோயினால் பாதிப்பு ஏற்படுமா?

தேனீக்களை இயற்கையில் பல்வேறு பூச்சிகள் தாக்குகின்றன. மெழுகு வண்டு ,அந்திப் பூச்சி, எறும்புகள், குளவிகள், நாவாய் பூச்சிகள் , கரப்பான் பூச்சி, வண்டு, செவ்வண்டு , சிலந்தி, பல்லி, ஓணான், பறவைகள், குரங்கு போன்றவைகளால் இதில் இருக்கும் தேன் கூடுகளை தாக்கும் வாய்ப்பு உண்டு.

இதை தவிர ஒரு சில வைரஸ், பாக்டீரியா என்ற ஒருவகை நோயினால் பாதிக்கப்பட்டு அழிந்து வருகின்றன.

நிலவேம்பு நாற்றுகளை எப்படி உற்பத்தி செய்ய வேண்டும்?

நிலவேம்பு விதைகளை விதைப்பதற்கு முன்பு 6 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து மணற்பாங்கான நிலத்தில் விதைக்க வேண்டும்.

நாற்றங்காலில் ஒரு அடிக்கு 20 சென்டி மீட்டர் என்ற இடைவெளியிலும் விதைக்க வேண்டும் .பிறகு மக்கிய தொழு உரம் கொண்டு லேசாக மூடிவிடவேண்டும்.

அதன்பிறகு வைக்கோல் பரப்பி தண்ணீர் பாய்ச்சி ஈரப்பதம் காக்க வேண்டும் .இதில் விதைகள் 15 முதல் 20 நாட்களில் முளைத்து விடும்.

சம்பா , தாளடி பட்டம் என்பதை எந்த மாதங்களில் குறிக்கிறது?

ஜூலை ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் ஜனவரி மாதங்கள் சம்பா ப ட்டம் ஆகும்.

செப்டம்பர் அக்டோபர் பிப்ரவரி மார்ச் வரை உள்ள மாதங்களில் தாளடி பட்டம் அழைக்கப்படுகிறது.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories