தேவையில்லாத உரோமம் கூட உரம் ஆகும்……

மனிதர்களுடைய முடி சலூன் கடை போன்ற அநேக இடங்களில் வீணாகிறது. அந்த முடியை நாம் திரும்பவும் பயன்படுத்துவதில்லை.

நீளமாக உள்ள முடியை மட்டும் எடுத்து டோப்பவாக பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள முடி வீணாகத்தான் போகிறது.

பொதுவாக மக்கள் மக்கிய பொருள் மற்றும் தேவையில்லாத பொருள்களைத்தான் பயிர்களுக்கு ஊட்டச்சத்து ஆதாரமாக வழங்குகிறார்கள். ஆனால் இப்போது வீணாகும் முடியை கூட நாம் பயிர் உற்பத்திக்கு ஊட்டசத்து ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மனிதனின் முடியை வைத்து பயிர்களுக்கு ஊட்டச்சத்தை வழங்க முடியும் என்று மிசிசிபி மாநில பல்கலைக்கழகத்தின் “HortTechnology”-ல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் முடிவுகளையும் வெளியிடடுள்ளனர்.

கீரை போன்று விரையில் வளர கூடிய பயிர்களுக்கு இந்த முடி பயனுள்ளதாக இருக்காது. ஏனென்றால் இந்த முடி மக்கி பயிர்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்க அதிக காலத்தை எடுத்துக் கொள்ளும்.

அதனால் இந்த கழிவு கீரை வளர ஏற்றதாக இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories