கொடி வகைகளுக்கு மூன்று அடிக்கு மேல் இருக்கும்படி பைகளில் மண்ணை எடுத்துக் கொள்ளவும்.
மண் போடும்போது அதோட சம அளவு இயற்கையான மற்றும் குப்பைகளை மண்ணோடு சேர்த்துக் கொள்ளவு.ம்
குப்பைகளை மண்ணையும் நன்கு கலந்து பை களில் இடவேண்டும்.
உங்கள் வீட்டு அன்றாட குப்பைகளை மட்கும் குப்பைகள் ஆக மாற்றி காய்கறி கழிவுகள் மற்றும் வீட்டின்முன் முதிர்ந்த உள்ள மர இலைகள் என அனைத்தையும் உபயோகித்துக்கொள்ளலாம்.
நீங்கள் மண்ணை இடும்போது கால்நடைகளின் சாணம் கிடைத்தால் சேர்த்துக் கொள்ளலாம். அது செடிகளுக்கு நல்ல உரமாக இருக்கும்.
பிறகு சேர்த்து வைத்துள்ள காய்கறி விதைகளை மண்ணில் இன்று காலை மாலை என இரு வேளையும் தண்ணீர் ஊற்றி வந்தால் போதும். அதன் பிறகு இயற்கை தன் விளையாட்டை ஆரம்பித்து விடும் .பிறகு தினமும் காலையில் எழுந்ததும் செடிகளைக் கண்டு அதனுடன் சிறிது நேரம் உறவாடுகள் இதனால் செடிகள் நன்றாக வளர்வதுடன் நம் மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.