“தோட்டக்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு”

“தோட்டக்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு”

விவசாயத்தில் இயற்கை சீற்றங்களால் ஒரு சில பாதிப்புகள் ஏற்படும். காற்று, மழை, பருவநிலை மாற்றம் போன்ற சூழ்நிலை காரணமாக விவசாயிகளுக்கு பாதிப்பு உண்டாகும். அந்த வகையில் விவசாயத்தில் விவசாய நிலத்தில் காற்று அடிப்பதால் ஏற்படும் பாதிப்பைத் இங்கு காணலாம்.

பிரகாஷுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது .அவர் அந்த நிலத்தில் வாழை சாகுபடி செய்ய அருகிலுள்ள அனுபவம் நிறைந்த விவசாயியிடம் ஆலோசனைக் கேட்டு விடலாம் என நினைத்துக் ஆலோசனை கேட்கச் சென்றார்.

அவரைக் கண்ட விவசாயி பிரகாஷ் வரவேற்று அந்த விஷயத்தை கேட்டறிந்தார் .அவர் வாழை சாகுபடியா? என்ற ஆச்சரியத்துடன் கேட்டவாறு “தோட்டக்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு” என்ற பழமொழி யுடன் நமது பகுதிக்கு வாழை வளர்ப்பது சற்று சிரமம்தான் என்று கூறினார்.

ஏன் அவர் கூறுகிறீர்கள் என்றார். அதற்கு அந்த விவசாயி, நமது பகுதியில் காற்று அதிகம் வீசும். எனவே சற்று உயரமாக வளரும் எந்த பயிர்களை சாகுபடி செய்தாலும் முழுமையான பலனை பெற முடியாது. அதாவது என்னுடைய அனுபவத்தில் வாழை ,கம்பு ,சோளம், நெல் போன்ற பயிர்களின் சாகுபடியில் வளர்ச்சிப் பருவத்தில் வரும் காற்றானது அனைத்துமே சேதப்படுத்திவிடும். இதைத்தான் “தோட்டக்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு “என்ற பழமொழி மூலமாக எடுத்துரைப்தேன் என்றார்.

உடனேயே பிரகாஷ் வேறு எந்த பயிர்களை சாகுபடி செய்ய முடியாதா என்று கேட்டான்.

அதற்கு அனுபவ விவசாயி சிறிய அளவில் வளரும் பழ வகைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள், கீரைகள் போன்ற பயிர்களை பயிர் செய்யலாம் என்றார்

இதைக் கேட்ட பிறகு நான் வாழை பயிரிடலாம் என்று மிகுந்த ஆர்வமும் உங்களிடம் ஆலோசனை கேட்க வந்தேன் ஆனால் பயிரிடுவது கடினம் என்று சொல்கிறீர்கள் என கவலையுடன் தெரிவித்தார்.

உடனே அனுபவ விவசாயி கொஞ்சம் அதிக வேலைப்பாடு கொண்ட பணியை செய்ய தயாராக இருந்தால் நீங்கள் நினைத்தபடியே வாழை பயிரிடலாம் என்றார்.

சற்று செலவானாலும் சரி அது என்ன வழி சொல்லுங்கள் என்றார். அதற்கு அனுபவ விவசாயி பண்ணைகளில் வயல் மற்றும் வரப்பு ஓரங்களில் சவுக்கு ,வேம்பு, பு ங்கம் ,தீவன மரங்கள் மற்றும் பயனுள்ள இதர மரங்களை வளர்க்கும் போது கால்நடைகளுக்கு தீவனமாகவும், பசுந்தாள் உர தேவையையும் பூர்த்தி செய்வதுடன் மண்ணரிப்பை குறைக்கலாம் ,காற்றினால் நிலத்தில் ஏற்படும் சேதத்தை குறைக்கலாம்,

மேலும் வாழை சாகுபடி செய்த வயலைச் சுற்றி உயர்ந்த மரங்களையும், சவுக்கு, மூங்கில், அகத்தி ,நட்டு வளர்த்தால் காற்று புயல் தாக்குதலில் இருந்து வாழை மரங்களை காப்பாற்றலாம் என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories