நன்மை செய்யும் பூச்சி பொறிவண்டின் பயன்களைத்
தெரிந்து கொள்வோமா?
அசுவினியை அழிப்பதில் பொறி வண்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை விவசாயம் செய்யப்படும் பண்ணைகளில் பொறிவண்டு காணப்படும்.
அசுவினிப் பூச்சிகளின் கூட்டத்திற்கு நடுவே தாய் பொறிவண்டு முட்டையை இடுகிறது.பொறிவண்டின் இளம் புழு பருவத்தில் அசுவினியின் சாற்றை உறிஞ்சி குடிக்கிறது, சற்று வளர்ந்த புழு அசுவினியை பிடித்துத் திண்கிறது. இளம் புழுவில் இருந்து பொறிவண்டாக மாறும் வரை 300 அசுவினியை பிடித்து திண்கிறது.
இதனால் அசுவினிப் பூச்சிகளின் எண்ணிக்கை பெருமளவு கட்டுப்படுத்தப் படுகிறது.
பொறிவண்டுகள் அரைத் துவரம் பரும்பு அளவில் இருக்கும். இதன் முதுகுப்புறம் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் இருக்கும், சில வகைகளில் புள்ளிகள் காணப்படும், சில வகைகளில் புள்ளிகள் இல்லாமலும் காணப்படும்.
குறிப்பாக மாவுப் பூச்சியினை நன்கு கட்டுப்படுத்தும் பொறி வண்டின் புழு 900 முதல் 1500 மாவுப்பூச்சியின் முட்டைகளையும், 300 குஞ்சுகளையும், 30 மாவுப்பூச்சியினையும் தின்றுவிடும்.
இதனை ஒரு ஏக்கருக்கு 100 என்ற எண்ணிக்கையில் வாங்கி வயலில் விடலாம். விட்ட பின்னர் இரசாயன மருந்து மருந்து அடிக்கக்கூடாது.
. பொறி வண்டு
இவ்வண்டு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் இலைகளில் அதிகம் காணப்படும். இவைகள் சுறுசுறுப்பாக இரையை தேடும் திறன் படைத்தது. இவைகள் பயிரில் ஒவ்வொரு இலையாக பூச்சிகளும், முட்டைகளும் இருக்கிறதா என பார்த்து இரையை தேடவல்லது.
வண்டுகளைவிட இவைகளின் குஞ்சுகள் அதிகமாக உண்ணும் திறன் படைத்தது. வண்டும், குஞ்சுகளும் நெற்பயிரில் காணப்படும் முட்டைகள் தத்துப்பூச்சியின் குஞ்சுகள் மற்றும் தத்துப்பூச்சிகளை உணவாக உண்ணும். தட்டை பயிரில் தோன்றும் அசுவனியை தின்பதற்காகவே அதிக அளவில் இப்பொறிவண்டுகள் உண்டாகும் இவை புகையான் பூச்சிகளை சாப்பிடும்.
எனவேதான் வயல் வரப்புகளில் தட்டைப்பயரை சாகுபடி செய்ய சிபாரிசு செய்யப்படுகிறது. தட்டைப்பயரை அசுவுனி தாக்கும் அசுவுனியை தேடி இந்த பொறிவண்டு வரும் இவை நெற்பயிரில் புகையான் வந்தால் அவற்றையும் விரும்பி உண்ணும் ஆக இவ்வண்டுகளை நாம் வயலில் பாதுகாப்பது அவசியம்.
எச்சரிக்கை –
போலி பொறி வண்டுகளும் உண்டு. போலி பொறிவண்டுகள் தீமை செய்யும் வகையைச் சார்ந்தது. இதன் லார்வாக்கள் மற்றும் வளர்ந்த பொறிவண்டுகள் இரண்டும் இலைகளை தின்னக்கூடியவை.
நன்மை செய்யக் கூடிய பொறிவண்டின் முதுகில் இருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கை 10-12 வரை இருக்கும். புள்ளிகளின் எண்ணிக்கை 12க்கு மேல் இருந்தால் அது போலி பொறிவண்டு. சில நேரங்களில் போலி பொறிவண்டுகளின் முதுகின் மீது நுண்ணிய இழைகள் இருக்கும்