நிலக்கடலை பயிரில் விதைப்பண்ணை அமைத்தால் அதிக மகசூல் பெறலாம்.

தமிழக மாவட்டங்களில் பெய்யும் பருவமழையை பயன்படுத்தி மானாவாரியாக ஆனி, ஆடிப் பட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலக்கடலை ரகங்கள்:

டி.எம்.வி.7, டிஎம்வி 13, ஜேஎல் 24 மற்றும் நீஆர்ஐ ஆகிய உயர் விளைச்சல் ரகங்கள்.

விதை தேவை:

ஓர் ஏக்கருக்கு 80 கிலோ விதை தேவைப்படும்.

பராமரிப்பு:

நிலக்கடலை விதைகளை 30 செ.மீ. மற்றும் 10 செ.மீ. இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.

விரிவாக்க மையங்களில் விதை:

ஒரே மாதிரியான பொறுக்கு விதைகளைப் பயன்படுத்தி சரியான இடைவெளியில் விதைத்தால் பயிர் எண்ணிக்கை சீராக காணப்படும். இதனால், நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவற்றை மானிய விலையில் பெற்று விதைப்பண்ணை அமைக்கலாம்.

அதிக மகசூலுக்கு:

ஏக்கருக்கு 5.0 மெட்ரிக் டன் மக்கிய தொழு உரம், 4:4:18 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தரவல்ல 10 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ மூயுரேட் ஆப் பொட்டாஷ் உரத்தை மண்ணில் போதிய ஈரம் இருக்கும் போது அடியுரமாக இட வேண்டும்.

நோய்த் தடுப்பு:

விதைகள் மூலம் பரவும் பூஞ்சான் நோயைத் தடுக்க விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோ டெர்மாவிரிடி அல்லது 10 கிராம் சுடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் திரம் அல்லது 2 கிராம் கார்பன்டைசிம் கொண்டு பூஞ்சான விதை நேர்த்தியும், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து விதைப்பதற்கு முன் ஓர் ஏக்கருக்கு தேவையான விதையை ரைசோயியம் 2 பாக்கெட், பாஸ்போபேக்டரியா 2 பாக்கெட்டை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து உயர் உர விதை நேர்த்திச் செய்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.

நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையைப் போக்க: வேளாண் துறையால் பரிந்துரைக்கப்படும் நிலக்கடலை நுண்ணூட்டச் சத்து 5 கிலோவை 20 கிலோ மண்ணுடன் கலந்து விதைத்தவுடன் மண் பரப்பில் தூவ வேண்டும்.

விதைத்த 40-45 ஆவது நாளில் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை மண்ணைக் கொத்தி இட்டு மண் அணைக்க வேண்டும்.

ஜிப்சத்தில் உள்ள கால்சியம் மற்றும் கந்தகச் சத்து அதிக எண்ணெய் சத்துக் கொண்ட திரட்சியான காய்கள் அதிகளவில் உருவாக உதவுகிறது. மேலும், நிலக்கடலைப் பயிரில் சுருள் பூச்சி, சிவப்பு கம்பளி புழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்க வாய்ப்புள்ளதால் பயிர் பாதுகாப்பு முறைகளை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உள்ளூர் சந்தை விலையுடன் பிரீமியம், உற்பத்தி மானியம் கூடுதலாக கிடைப்பதால் அதிக லாபம் கிடைக்கும்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories