நீர் இரைக்க சூரிய சக்தி பம்பு……

சூரிய மின்சக்தி பம்பு:

சூரிய மின் சக்தி மூலம் இயங்கும் நீர் இறைக்கும் பம்பு உலகளாவிய வேளாண்மையின் நிலையான வளர்ச்சிக்கு துணை புரிகிறது.

இந்த தொழில்நுட்பம் இன்றய வேளாண்மையின் ஆற்றல் தேவை,கரிம எரிபொருள் பற்றாக்குறைகளை பூர்த்தி செய்கிறது.

சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் சூரியஒளி மின் அழுத்தம். நீர் இறைக்கும் பம்பு அரசின் மின்சார விநியோக மற்ற இடங்களுக்கு மிகவும் சிறந்த சிக்கனமான தொழில்நுட்பம் ஆகும்.

சூரியமின் சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு மொத்தம் ஒரு லட்சம் லிட்டர் நீரை 30 அடி ஆழத்திலிருந்து இறைக்க வல்லது.

அவ்வாறு இறைக்கப்பட்ட தண்ணீரின் அளவு மேம்பட்ட நீர் விநியோக நுட்பங்கள் மூலம் 5 முதல் 8 ஏக்கர் நிலத்தின் பாசனத் தேவையை பூர்த்தி செய்யும் என கண்டறியப்பட்டுள்ளது.

சூரியமின் சக்தி பம்பு என்பது சூரியமின் சக்தி மின் தகடு (pv Module) மின் மாற்றி (Inverter ), கண்காணிப்பு கட்டுப்பாட்டுக் கருவி (Charge Controller ) மற்றும் நீர் இறைப்பான் (Pump) ஆகியவற்றைக் கொண்டது.

சூரியமின் சக்தி பம்பு என்பது மிகவும் சாதாரணமாக உள்ள மோட்டார் பம்புகளைப் போன்றதே ஆகும்.

சூரியஒளித்தகடு மூலம் உற்பத்தியான நேர் மின்சாரத்தை (DC) எதிர்மின்சாரமாக (AC) மின் மாற்றியின் மூலமாக மாற்றி,சூரிய பம்புகளைப் பயன்படுத்தலாம். சூரியமின் சக்தி உற்பத்தி அளவிற்கேற்ப பம்புகளைப் பயன்படுத்தி நீர் இறைக்கும் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். ஆழ்குழாய் பம்புகள்,மிதவை பம்புகள் தரைமட்ட பம்புகள் என மூன்று வகைகளை இடங்களுக்கு தக்க பயன்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories