நுண்வேளாண்மை செலவுகளை குறைத்;து அதிக லாபத்தை எடுக்க

நுண்வேளாண்மை செலவுகளை குறைத்;து அதிக லாபத்தை எடுக்க

நுண்வேளாண்மை என்பது இடுபொருட்களின் செலவுகளை குறைத்;து அதிக லாபத்தை எடுப்பது குறிப்பாக பயிருக்குத் தேவையான அளவில் உரத்தினையும் மற்ற இடுபொருட்களையும் பயன்படுத்துவது

பயிர்சாகுபடிக்கு முன்பே சரியான முறையில் திட்டமிட்டு செயல் படுதல் அவசியம்.
திட்டமிடுதல் என்பது மிகவும் எளிதானது.

எந்த பயிரை தேர்ந்தெடுப்பது, விதை எங்கு வாங்குவது, செலவிற்கு தேவையான கடன்வசதிக்கு என்ன செய்வது, பயிர் சாகுபடி முறை பற்றிய செய்தி சேகரிப்பது மற்றும் மகசூலை எங்கு விற்பனை செய்வது ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டால் விவசாய சாகுபடியில் கூடுதலான லாபத்தினை சிரமமின்றி எளிதாக பெறமுடியும்.

திட்டமிட்டபடி பயிர் சாகுபடி செய்யும் நிலத்தில் மண்ஆய்வு செய்து அதற்குத் தகுந்தாற் போன்று பயிருக்கு தேவையான அளவில் மட்டும் உரமிடுவதால் உரச் செலவினை குறைப்பதுடன் மகசூலும் அதிகரிக்கிறது.

மேலும் மண்ணின் தரமும் பாதுகாக்கப்படுகிறது. இந்த மண்ஆய்வில் நுண்வேளாண் முறையான மாறுபட்ட அளவில் உரமிடும் முறையை கடைபிடித்தால் விவசாயிகள் உரச் செலவினை 30 லிருந்து 40 சதம் வரை குறைக்கலாம்.. மற்றும் 25 சதம் மகசூலினை அதிகரிக்கலாம்.

பயிர் சாகுபடிக்கு ழுழுவதுமாக இரசாயன உரத்தினை நம்பி சாகுபடி செய்யக்கூடாது. இரசாயன உரத்தினை அதிகமாக உபயோகப்படுத்துவதால் பயிருக்கு பூச்சி தாக்குதல் அதிகரித்து பயிரின் மகசூலை வெகுவாகக் குறைக்கிறது.

உயிர் உரத்தினை விதை நேர்த்தியாகவும் மற்றும் மண்ணில் கலந்து இடுவதால் மகசூல் அதிகரிப்பதுடன் செலவு குறைகிறது மேலும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்கமடையச்செய்து மண்ணின் தரமும் பாதுகாக்கப் படுகிறது.

விவசாயிகள் விதைகளை வாங்கும்பொழுது சான்று பெற்ற விதையா என பார்த்து வாங்கவேண்டும். சான்று பெறாத அல்லது காலாவதியான விதைகளை விதைப்பதற்கு பயன்படுத்தக்கூடாது.

ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகள் கடைப்பிடித்தால் பயிரின் உற்பத்திச் செலவு குறைக்க முடியும்..

விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிரில் பூச்சி நோய் தாக்குதல் இருக்கிறதா என்று தெரியாமலேயே ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் பயிரின் மகசூல் வெகுவாக குறைகிறது.

பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் இருந்தால் மட்டும் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம் முடிந்தளவு இயற்கை பூச்சிகொல்லிகளை பயன்படுத்தவும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories