நெல் ரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள் மற்றும் இடத்திற்கு ஏற்ற மரங்கள் ஒரு அலசல்..

1.. அறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற குறுகிய கால ரகங்கள் குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை.

குறுவைப் பட்டம் – ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலம்.

2.. தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற மத்தியகால (130 முதல் 140 நாட்கள்) ரகங்கள் சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.

சம்பா பட்டம் – ஆகஸ்ட் மாதம்.

3.. மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா போன்ற நீண்டகால ரகங்கள் நீண்ட கால பட்டத்துக்கு ஏற்றவை

நீண்ட கால பட்டம் – ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலம்.

இடத்திற்கு ஏற்ற மரங்கள்..

1.. விட்டை சுற்றிய வைக்க ஏற்ற மரங்கள்:

தென்னை, சௌண்டல், சீத்தா, வேப்பமரம், முருங்கை, பப்பாளி, நெல்லி மரம், கொய்யா மரம், மாதுளை, அகத்தி, பலா மரம், வாழை, மருதாணி செடி, வாத நாராயண மரம், தேக்கு, முள்ளிலா முங்கில்.

2.. வறட்சி நிலத்திற்கான மரங்கள் :

மா, வாகை, வேம்பு, கொடுக்காபுளி, சீத்தா, உசிலை, நாவல், பனை, நெல்லி, சௌண்டல், புளியன், முருங்கை

3.. உயிர் வேலி மரங்கள் :

ஓதியன், பூவரசு, கிளுவை, கொடுக்காபுளி, இலந்தை, பனை, பதிமுகம், குமிழ், மலைவேம்பு,, வெள்வேல், முள்ளிலாமுங்கில்.

4.. சாலை ஓரத்திருக்கான மரங்கள் :

இலுப்பை, வாகை, நாவல், புளியமரம், புங்கமரம், வேப்பமரம், மருதமரம், புரசமரம், அத்திமரம், இச்சிமரம், தீக்குச்சிமரம், பனை, அரசமரம், ஆலமரம், துங்குமுஞ்சி மரம்..

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories