ஆகாயத்தாமரை செடிகளில் நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் விட்டு விடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
நீப்பூ கோரை கூன் வண்டு வெட்டுக்கிளி போன்ற உயிரிகளை விடும்பொழுது கட்டுப்படுத்தலாம்.
கோரை புல்லை கட்டுப்படுத்துவது எப்படி?
கூரைபு ல்லை கட்டுப்படுத்த தக்கை பூண்டு செடியை பயிரிடலாம்.
கிழங்குகளை மண்ணின் மேல் மட்டத்திற்கு கொண்டு வந்து சூரிய வெப்பத்தில் காய வைத்தல் தகுந்த பயிர் சுழற்சி முறையை கடைபிடித்தல் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும்.
பாசன நீர் வசதியுள்ள நிலங்களில் சேற்று உழவு செய்து நெல் பயிரிடுவதால் கலைகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.
அடர்ந்து விரிவான வளர்ச்சி உடையார் காராமணி, அவரை போன்ற பயறு வகைகளை பயிர் வரிசைகளுக்கு இடையே சாகுபடி செய்வதால் கோரை வளர்ச்சியை தடுக்கலாம்.
மண்புழு உரத்தை பயிர்களுக்கு எவ்வாறு இட வேண்டும்?
நெல் ,கரும்பு பயிருக்கு ஏக்கருக்கு இரண்டு டன் மண்புழு உரம் இடவேண்டும்.
கடலை, உளுந்து போன்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு ஒரு டன் தொழு உரம் இடவேண்டும்.
வாழை மரத்திற்கு ஒரு கிலோ கிராம் ( மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தென்னை மரத்திற்கு 5 கிலோ கிராம் ( வருடத்திற்கு இரண்டு முறை பழ மரங்களுக்கு 5 கிலோ கிராம்( வருடத்திற்கு இரண்டு முறை மண்புழு உரம் இடவேண்டும்.
காய்கறி மற்றும் பூச்செடிகளுக்கு 150 கிராம்( மாதம் ஒரு முறை மண்புழு உரம் இட வேண்டும்.
நிலக்கடலையை மானாவாரியாக பயிரிடலாம?
நிலக்கடலை இது மிகவும் முக்கியமான மானாவாரி பயிராக விளங்குகிறது.
பெரும்பாலான சிறு குறு விவசாயிகள் சுமார் 80 சதவீதத்திற்கு மேல் நிலக்கடலை பயிரில் மானாவாரி நிலங்களில் பயிர் செய்கிறார்கள்.
கலப்பின மாடுகள் வளர்ப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் உள்ளன?
கலப்பின மாடுகள் அதிக பால் கொடுக்கும். கன்று போடும் இடைவெளி 12 முதல் 14 மாதமாகும்.
இந்த மாடுகள் பருவத்திற்கு வர குறைவான நாட்களே ஆகும். அதாவது 12 முதல் 18 மாதத்தில் பருவத்திற்கு வரும்.
இந்த மாடுகளின் அமைதியாக காணப்படுவதால் கண்டிப்பது எளிமையாக இருக்கும்.