நோய் கட்டுப்பாட்டிற்கு சில குறிப்புகள்

நோய் கட்டுப்பாட்டிற்கு சில குறிப்புகள்
பல்வேறு பூஞ்சாண நோய்கள் அதிகப்படியான ஈரம் மற்றும் குறைந்த காற்றோட்டம் ஆகிய காரணங்களால் பரவுகின்றது. செடிகளை மிக நெருக்கமாக நட்டால் தண்ணீர் மிகவும் மெதுவாக ஆவியாகிறது. இதனால் அதிகப்படியான ஈரம் எப்பொழுதும் இருக்கும் எனவே செடிகளை நெருக்கமாக வளர்க்கக் கூடாது.
நன்றாக வளர்ந்த செடிகளுக்குத் தேவையான இடத்தைக் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே விட்ட தண்ணீர் காய்ந்த பிறகே மீண்டும் செடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். பாதிக்கப்பட்ட செடிகள் அல்லது இலைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். இம்முறைகளை கையாண்ட பிறகும், நோயின் தாக்குதல் அதிகமாக இருந்தால், கீழ்க்கண்ற இயற்கைவழி முறையில் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த
டிரைக்கோடெர்மா விரிடி என்ற இயற்கை பூஞ்சாணக்கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 10கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்
அல்லது ஒரு ஏக்கருக்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ மக்கிய தொழுவும் 50 கிலோவில் கொட்டி கலந்து தண்ணீர் தெளித்து மீண்டும் கலந்து கோணி சாக்கு அல்லது தென்னை மட்டை போட்டு மூடி நிழலில் ஒரு வாரம் வைத்திருந்த பிறகு வயலில் ஈரம் இருக்கும் பொழுது வேருக்கு அருகில் போட வேண்டும் ஒரு வாரம் வரை இரசாயன உரத்தை போடக்கூடாது.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு டிரைக்கோடெர்மா விரிடி 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து நாற்றின் வேர்பகுதியை நனைத்து நடவு செய்தால் வேர்அழுகல் நோய் வராது
கருகல்நோய், இலைப்புள்ளி நோய், பூஞ்சாண நோயியை கட்டுப்படுத்த
சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்ற இயற்கை பூஞ்சாணக்கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 10கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்
ஒரு ஏக்கருக்கு சூடோமோனஸ் புளோரோசன்ஸ் 2 கிலோ மக்கிய தொழுவும் 50 கிலோவில் கொட்டி கலந்து தண்ணீர் தெளித்து திரும்பவும் கலந்து கோணிச்சாக்கு அல்லது தென்னை மட்டை கொண்டு மூடி நிழலில் ஒரு வாரம் வைத்திருந்த பிறகு வயலில் ஈரம் இருக்கும் பொழுது வேருக்கு அருகில் போட வேண்டும். ஒரு வாரம் வரை இரசாயன உரத்தை போடக்கூடாது.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு சூடோமோனஸ் புளோரோசன்ஸ் 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து நாற்றின் வேர்பகுதியை நனைத்து நடவு செய்தால் கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய் மற்றும் பூஞ்சாணங்களால் வரும் நோயை கட்டுப்படுத்தலாம்
அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்த
50 மில்லி கோமியத்தை அரை லிட்டர் தண்ணீருடன் கலந்து காலை நேரத்தில் செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் வைரஸ் மற்றும் பாக்டீயா மூலம் செடிகளுக்குப் பரவும் நோய்களை தடுக்கலாம்.
பசுஞ்சாணக் கரைசல்
ஒரு கிலோ பசுஞ்சாணத்தை 10 லிட்டர் தண்ணீருடன் கலக்க வேண்டும் ஒரு சாக்கு துணியை வைத்து இதை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய கரைசலுடன் மேலும் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்து மீண்டும் வடிகட்ட வேண்டும் இப்பொழுது கிடைக்கும் கரைசல் தெளிவாக இருக்கும் இதை செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்கவேண்டும் இவற்றை தெளிப்பதன் மூலம் பாக்டீரியாவால் பரவும் இலைப்புள்ளி நோய் மற்றும் பிற நோய்களைக் கட்டுப்படுத்தலாம்
புதினா கரைசல்
250 கிராம் புதினா இலையை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் 1- 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கலந்து செடிகளுக்கு தெளிப்பதால் பாக்டீரியா இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories