பட்டம் பார்த்து பயிர் செய்தால் அந்த பயிருக்கு உகந்த தட்பவெப்ப சூழ்நிலை/காலநிலை காற்றோட்ட நிலை இருக்கும் எனவே அதிக மகசூலை அது கொடுக்கும்.
அதனால் அதிக மகசூலை ஒரு தாவரம்/பயிர் நன்றாக வளர்ந்து கொடுக்கும் காலத்தை பட்டம் என்று கூறலாம்.
இயற்கை விவசாயம் , பட்டம், மாதம், பட்டம் தவறுவது பற்றி அறிந்த தகவலை பகிர்கின்றேன.
பட்டம் பார்த்து பயிர் செய் என்பது நமது முன்னோர்களின் அனுபவ கூற்று..
இதை நமது அனைத்து விவசாயிகளும் கடைப்பிடிக்கின்றனர்.
ஆனால் நமது முன்னோர் சொல்லி கொடுத்து சென்ற இயற்கை யுடன் வாழ்ந்த விவசாயத்தை செய்ய மறுக்கின்றனர். அது ஒரு புறம் இருக்கட்டும்…
பட்டத்துக்கு வருவோம்.
பட்டத்தை சம்பா பட்டம், குருவை பட்டம், நவரை பட்டம், கார் பட்டம், தாளடி , சொர்ணவாரி, முன் சம்பா, பின் சம்பா, சித்திரை பட்டம், ஆடி பட்டம், கார்த்திகை பட்டம் என்று பலவிதமாக பிரித்து மாதத்தை பட்டத்துடன் தொடர்புபடுத்தினர்.
பட்டமும் மாதமும்:
சொர்ணவாரி : சித்திரை – ஆடி (ஏப்ரல் 15 – ஆகஸ்டு 14)
சம்பா : ஆடி – மார்கழி ( ஜூலை 15 – ஜனவரி 14)
பின்சம்பா : புரட்டாசி – தை ( செப்டம்பர் 15 – பிப்ரவரி 14)
நவரை : மார்கழி – மாசி ( டிசம்பர் 15 – மார்ச் 14)
குருவை : நடு வைகாசி – நடு ஆவணி (ஜூன் 1 – ஆகஸ்டு 31)
நெல்லுக்கு உகந்த பட்டமான சம்பா பட்டத்தை ஆடிபட்டம் தேடி விதை என்று கூறுவார்கள் நம் முன்னோர்கள்
இந்த பழமொழி அனைத்து விதைக்கும் பொருந்தும் இதையே மாதத்துடன் தொடர்பு படுத்தினர்.
🌾 கருப்புக் கவுனி (நெல்)
சுமார் 150 – 170 நாட்கள் மொத்தப் பயிர்க்கால அளவுடைய இதன் நெற்பயிர்கள், நீண்டகால நெற்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய சனவரி மாதம் தொடங்கும் நவரைப் பருவமும் , மற்றும் செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவமும் ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும் இப்பருவத்தில், தமிழகத்
தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.
மாப்பிள்ளைச் சம்பா(நெல்)
நீண்டகால (155 – 160) நெல் வகையான இது, சூலை 15 முதல் சனவரி 14 முடிய சம்பா பருவத்திலும், மற்றும் செப்டம்பர் 15 முதல் பிப்ரவரி 14 வரையான பின் சம்பா பருவத்திலும் பொதுவாக பயிரிடப்படுகிறது.
“பட்டம் பார்க்கா பயிர் பாழ்” என்ற பழமொழிக்கேற்ப …பட்டத்தில் பயிர் செய்வோம்.
நன்றி
P.சத்தீஸ் குமார் குடியேற்றம் …