பட்டாணி சாகுபடி

செம்மண் பூமியிலும் களிமண் பூமியிலும் வளரும் .மேலும் இதற்கு குளிர்ந்த வானிலை தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை மூன்று அல்லது நான்கு தடவை மடக்கி உழ வேண்டும். கடைசி உழவில் 5 டன் மக்கிய தொழு உரமிட்டு உழ வேண்டும். பிறகு 45 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

எக்டருக்கு 100 கிலோ விதை போதுமானது.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும் .பிறகு 2 கிலோ பாஸ்போபேக்டீரியா மண்ணுடன் கலக்க வேண்டும்.

விதைத்தல்
பார்களின் பக்கவாட்டில் விதைகளை முப்பத்தி நான்கு சென்டிமீட்டர் ஆழத்தில் ஊன்ற வேண்டும். பிறகு விதைக்கு விதை பத்து சென்டிமீட்டர் இடைவெளி விட்டு விதையை ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் ஒரு தண்ணீரும் பிறகு மூன்று நாள் கழித்து உயிர்த் தண்ணீர் விடவேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories