பயறுவகை பயிர்களில் பூச்சி நிர்வாகம்.

பயறுவகை பயிர்களில் பூச்சி நிர்வாகம்.
வெள்ளை ஈ
இளம் மற்றும்; வளர்ச்சியடைந்த பூச்சிகள் இலையின் அடியில் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடுகின்றன.
இப்பூச்சியானது மஞ்சள் தேமல் நோயை ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்புகிறது. இத்தேமல் நோயானது ஒரு செடியில் இருக்கும் பொழுது அச்செடியை வேரோடு பிடுங்கி அழித்து விடவில்லை எனில் இந்நோயானது வயல் முழுவதும் பரவிவிடும். இதன் தாக்குதலுக்கு உள்ளான
செடிகளிலிருந்து குறைவான அளவே காய்கள் கிடைக்கும். காய்களின் அளவானது சிறுத்துவிடும். காய்களின் உள்ளே உள்ள விதைகளானது சுருங்கி விடும்;. இந்நோயின் தாக்குதல் தீவிரமாகும். பொழுது செடியானது பூத்துக் காய்க்கும் தன்மையை முற்றிலுமாக இழந்துவிடும்.
அசுவினி
இளம் மற்றும் வளர்ச்சியடைந்த பூச்சிகள் இலைகளுக்கு அடியிலும், இலைக்காம்பு, பூக்காம்பு பூக்கள் காய்கள் மற்றும் நடுத்தண்டுகளிலும் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுகின்றன. இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இலைகளும் சுருண்டு விடுகின்றன. இவை தேன் போன்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதால் அவற்றை உண்பதற்கு எறும்புகள் வருகின்றன.
நாவாய்ப்பூச்சி
இளம், வளர்ச்சியடைந்த பூச்சிகள் காய்களின் மீது கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுவதால் காய்கள் சுருங்கியும் சிறுத்தும் காணப்படும் இவை துவரையில் 10 சதவீத அளவிற்கு சேதத்தினை உண்டு பண்ணுகின்றன. இவை துவரையை தவிர அவரை, தட்டப்பயறு உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றில் சாற்றினை உறிஞ்சி சேதத்தினை ஏற்படுத்துகின்றன. நாவாய்ப் பூச்சியானது பழுப்பு நிறத்தில், உடம்பு நீண்டு காணப்படும். கழுத்துப் பகுதியின் இருபுறுமும் முள் போன்ற அமைப்பு கொண்டிருக்கும்.
பச்சைக் காய்ப்புழு
இவை 180 க்கும் அதிகமான பயிர்களைத் தாக்குவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான களைச் செடிகளையும் தாக்குகின்றன. ஹெலிக்கோவெர்பா எனப்படும் காய்ப்புழுவின் இளம் புழுவானது இலைகளைத் தின்னும். வளர்ந்த புழுவானது காய்களில் வட்ட வடிவ துளையை ஏற்படுத்தி அதனுள் தலையை மட்டும் உள்ளே நுழைத்து உள்ளே உள்ள விதைகளை தின்னும்.தலை தவிர உடம்பில் உள்ள மற்ற பாகங்கள் அனைத்தும் துளைக்கும் வெளியே இருக்கும்.
தாக்கப்பட்ட இலைகள் மற்றும் காய்களின் மீதும் இவற்றின் எச்சம் காணப்படும். இப்பூச்சியின் தாக்குதல் அதிகளவில் இருக்கும் பொழுது மகசூல் இழப்பு ஏற்படும்.
புள்ளிக்காய்ப்புழு
பயறவகைப் பயிர்களைத் தாக்கி அதிகமான மகசூல் இழப்பினை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான காய்ப்புழு புள்ளிக் காய்ப்புழு ஆகும். இவை துவரை, மொச்சை, தட்டைப்பயறு, உளுந்து மற்றும் பாசிப்பயறு போன்றவற்றை தாக்குகிறது. இளம் புழுக்களானது பூ மொட்டுகளை உண்ணக் கூடியது, பாதிக்கப்பட்ட பூ மொட்டுக்காளனது அழுகி பின்னர் கீழே உதிர்ந்து விடும்
வளர்ச்சியடைந்த புழுக்கள் இலைகள், பூக்கள் மற்றும் காய்களை பிணைத்துக் கொண்டு காய்களை துளையிட்டு உண்ணக் கூடியது. புழுக்களானது துளையிட்ட ஓட்டைகளை தனது எச்சத்தைக் கொண்டு மூடியிருக்கும். புழுவானது இளம் மஞ்சள் நிறத்தில் உடம்பின் மேற்பகுதியில் ஒவ்வொரு கண்டத்திலும் நான்கு பழுப்புநிற புள்ளிகளை கொண்டிருக்கும்.
அந்துப்பூச்சியின் முன் இறக்கையானது இளம் பழுப்பு நிறத்தின் வெண்ணிற திட்டுகளுடன் காணப்படும். பின்னிறக்கையானது வெண்மை நிறத்தில் பழுப்பு நிறத் திட்டுகளுடன் காணப்படும்.
நீல வணண்த்துப் பூச்சி
இப்பூச்சியின் புழுவானது பூ மொட்டுக்கல், பூக்கள் மற்றும் காய்களின் துளைகளை ஏற்படுத்தி சேதங்களை உண்டாக்குகின்றன.
பிளவு இறக்கைப்பூச்சி
இக்காய்த் துளைப்பானானது துவரையை அதிகமாகக் தாக்கக் கூடியது. புழுக்களானது பூ, மொட்டுக்கள், மற்றும் காய்களை துளைத்து சேதம் விளைவிக்கின்றன. புழுக்களானது இளம் பச்சை நிறத்தில் உடம்பில் சிறிய உரோமங்களுடன் காணப்படும். புழுப் பருவமானது 30 நாட்களுக்கு மேல் நீடிப்பதால் இதன் சேதமானது அதிகளவில் இருக்கும். அந்துப்பூச்சியானது பழுப்பு நிறத்தில் பிளவுபட்ட இறக்கைகளுடன் காணப்படும்.
பூ வண்டுகள்
இவை துவரை மற்றும் தட்டபயறு சாகுபடி செய்யும் இடங்களில் பூக்களை உண்டு அதிகளவில் சேதத்தினை ஏற்படுத்துகின்றன. இதனால் செடியில் காய்பிடிப்பது பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகின்றது. வண்டுகளானது கருப்பு மற்றும் சிவப்பு வண்ணத்தில் காணப்படும்.
ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகள்.
கோடை உழவு செய்வதன் மூலம் கூட்டுப் புழுக்களை வெளிக் கொணர்ந்து அழிக்க இயலும்.
காய்ப்புழுக்களின் தாக்குதல் குறைவாக உள்ள துவரை இரகங்களான வம்பன் 1 வம்பன் 2 ஏ.பி.கே மற்றும் கோ(ஆர். ஜி) 7 போன்ற இரகங்களை விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
மஞ்சள் தேமல் நோயிக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட உளுந்து இரகங்களான வம்பன் 6 வம்பன் 8 மற்றும் வம்பன் 10 போன்ற இரகங்களை பயிரிடலாம்.
மஞ்சள் தேமல் நோய் பாதித்த செடிகளை உடனடியாக பிடுங்கி அழித்துவிட வேண்டும்.
பச்சைக் காய்ப்புழுக்களின் ஆண் அந்துப்பூச்சிகளை கவர இனக்கவர்ச்சி பொறியானது ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும் இனக்கவர்ச்சி பொறியானது பூக்கும் பருவத்திற்கு முன்பிருந்தே வைக்கப்பட வேண்டும்.
மேலும் பொறியின் உயரமானது செடியின் உயரத்திற்கு ஒரு அடிக்கும் மேல் இருக்க வேண்டும். இரண்டு பொறிகளுக்கு இடையே 10 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி அமைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அழிக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு 50 பறவைத் தாங்கிகள் அமைத்து இறை விழுங்கிகளை ஊக்குவித்தல் வேண்டும்.
நன்மைசெய்யும் பூச்சிகளான பொறி வண்டுகள் ஒட்டுண்ணி சிலந்திகள் அதிகமாக காணப்படும்
பொழுது இரசாயன பூச்சி மருந்து தெளிப்பதை தவிர்க்கலாம்.அல்லது வேம்பு சார்ந்த பூச்சி கொல்லி மருந்துகளைத் தெளிக்கலாம்.
சாறுஉறிஞ்சும் பூச்சிகளான நாவாய்ப் பூச்சி அசுவின், வெள்ளை ஈ, போன்றவற்றை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு டைமித்தோயேட் 2 மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 2 மில்லி அல்லது இமிடா குளோரிபிட1 மில்லி போன்றவற்றை தெளிக்கலாம்.
காய்ப்புழுக்கள் மற்றும் காய்,ஈக்களை கட்டுப்படுத்த எமாமேக்டின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். அல்லது குளோரி பைரிபாஸ் ஒருலிட்டர் தண்ணீருக்கு 3மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.
இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய் கரைசல் தெளிக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு 100 மில்லி என்.பி.வி கரைசல் தெளிக்கலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories