பயிரிடும் போது செய்ய வேண்டிய முறைகள்

 

 

நிலத்தின் வளம் மற்றும் கிடைக்கக் கூடிய நீரின் அளவுக்குத் தக்கவாறு பருவத்திற்கு ஏற்பபயிர் ரகத்தை தேர்ந்தெடுக்கவேண்டும். நோயை எதிர்க்கும் ரகத்திற்கு முன்னுரிமை கொடுத்தல் அவசியம்.

உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்தும் டிரைக்கோடெர்மா எனும்பூஞ்சணத்தையும் சூடோமோனாஸ் என்னும் பாக்டீரியாவையும் விதை நேர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும்.

இயற்கை உரங்களையும் தாவரப் பொருட்களை மிகுதியாக பயன்படுத்துவதால் நிலவளத்தை மேம்படுத்தலாம்.

தேர்வு செய்யப்பட்ட பயிரிட ஏற்ற காலங்களில் விதைத்தால் சில நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலும். விதை அளவு பயிர் நெருக்கமும் பரிந்துரை செய்யப்பட்ட அளவிலேயே இருக்க வேண்டும்.

அளவுக்கு அதிகமாக ஈர மண்ணில் வாழும் நோய்க்காரணி களுக்கு சாதகமாக அமைவதால் அளவாக நீர் பாய்ச்சி முறைகளை கையாள வேண்டும்.

தாவரங்களில் இருந்து கிடைக்கும் நச்சுயிரி எதிர்ப்பு சக்தியையும் வேம்பு மர பொருட்களையும் பயன்படுத்தும் நிலக்கடலை மற்றும் நெற்பயிரை தாக்கும் நச்சுயிரி நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. அறுவடை செய்யும்போது பழங்களிலும் காய்கறிகளிலும் காயம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் .விதைப்பு முதல் அறுவடை வரை பயிர்களை கண்காணித்தல் அவசியம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories