மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் வாயிலாக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய சேவைமையம் செயல்பட்டு வருகிறது. மே 24 தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது இந்த சமயத்தில் விவசாயிகள் வீடுகளில் இருந்தாலும், வயல், தோட்டங்களுக்கு சென்று விவசாயபணியிலும் ஈடுபடுகின்றனர். இந்த வேளையில் வீட்டில் இருந்தபடியே தொழில்நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பயிர் சாகுபடி குறித்து ஆலோசனை பெற மத்திய அரசு கிஷன் கால் செண்டர்களை துவங்கியுள்ளது.அதன்படி விவசாயிகள் 1800 180 551 கட்டனமில்லா எண்ணில் பேசலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டடம், சந்தியூரில்,வேளாண் அறிவியல் நிலையம் செயல்படுகிறது.அங்கு வேளாண் விஞானிகள் பயிர் நடவு முதல் அறுவடை வரை, விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனை சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். பயிர் சாகுபடி, மண் பாதுகாப்பு, னாய் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, விதை தேர்வு உள்ளிட்டடவை குறித்து, தொழில்நுட்ப பயிற்சி அளிக்கின்றனர். தற்போது வேளாண் விஞ்ஞானிகளை விவசாயிகள் சந்திக்க முடியாத நிலை உள்ளது. இதனால் விவியசாயிகள் ஆலோசனை பெற மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன