பஞ்சகவியா கரைசலை வாரம் ஒரு முறை தெளிக்கலாம்.
மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் நீர்ப்பாசனம் வழியாக கொடுக்கும்போது பருத்தியில் சப்பை கொட்டுவதும் குறைக்கப்படும்.
செடி அவரை சாகுபடி செய்ய ஏற்ற ரகம் என்ன?
செடி அவரை சாகுபடி செய்ய கோ 6 கோ 7 கோ 8 கோ 9 கோ 1o கோ11 கோ12 கோ 13 கோ ( ஜிபி] 14 அர்க்க ஜாய் மற்றும் அர்கா விஜய் போன்ற ரகங்களைப் பயிரிடலாம்.
செடி அவரை நன்கு உழுத நிலத்தில் 6ox3o சென்டிமீட்டர் அளவில் பார்கள் அமைத்து ரைசோபியம் நுண்ணுயிர் உரம் அரிசி கஞ்சியுடன் அரை மணி நேரம் முன் விதை நேர்த்தி செய்த விதைகளை பார்களின் ஒரு புறமாக 2-3 சென்டி மீட்டர் ஆழத்தில் விதைப்பு செய்ய வேண்டும்.
சாம்பல் பூசணி அதிகம் பூ பிடிக்க என்ன செய்வது?
மீன் அமிலக் கரைசல் ஜீவாமிர்தக் கரைசல் முறை மாறி மாறி வாரம் ஒரு முறை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.
அரப்பு மோர் கரைசலை பூ பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறைய பூக்கள் பூக்கும்.
பழத் தோட்டத்தில் அணில் தொல்லையை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
பூண்டு வாசனை அணில்களுக்கு பிடிக்காது அதனால் பூண்டு கரைசலைத் தெளித்து அணில் தொல்லையைக் கட்டுப்படுத்தலாம்.
ஒரு கைப்பிடி பூண்டினை எடுத்து அதனை நன்றாக அரைத்து 4 லிட்டர் தண்ணீரில் கலந்து பழ மரங்களின் மீது தெளித்து விட வேண்டும்.
கடலை சாகுபடியில் கால்நடைகளுக்கான பங்கு என்ன?
நிலக்கடலையை ஆய்ந்த பிறகு கிடைக்கும் பச்சைக்கொடி வெயிலில் உலர வைத்து சுமார் 40 சதவீதம் வரை தீவனத்தில் கலக்கலாம்.
நிலக்கடலையின் மேல் தோலில் சுமார் 32 சதவீதம் புரதச்சத்து இருப்பதால் இதனை கோழி மற்றும் ஆட்டுத்தீவனத்தில் கலக்கலாம்.
ஆடு ,கோழிகளை வளர்க்க கட்டப்பட்டுள்ள ஆழ்கூள கொட்டகையில் இந்த கழிவை பயன்படுத்தி விட்டு மீண்டும் எடுத்து வயலில் உரமாக போடலாம்.