பருத்தி பயிரை பாதிக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுபடுத்த 

பருத்தி பயிரை பாதிக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுபடுத்த
பருத்தியை அதிகளவு சேதபடுத்தும் பூச்சிகளை ஒழிக்க புகையிலை மற்றும் காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் “அக்னி அஸ்திரம்’ என்ற இயற்கை முறை பூச்சி விரட்டி கரைசல் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காந்திகிராம பல்கலை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது:
பருத்தி சாகுபடி துவங்கி விட்டதால் பூச்சிகளின் தாக்குதல் அதிகரிக்கும். இதனால் தரமான பஞ்சு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
பூச்சிகளை ஒழிக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட “அக்னி அஸ்திரம்’ கரைசலை விவசாயிகள் பயன்படுத்தலாம்.பூச்சிகள் செடிகளின் அருகில் வராமல் ஓடி ஒளிந்து கொள்ளும்.
அக்னி அஸ்திரம்’பசையை தயார் செய்ய புகையிலை ஒரு கிலோவும், வேப்பஇலை 5 கிலோவும், பச்சை மிளகாய் 2 கிலோவும், பூண்டு ஒரு கிலோவும் சேர்த்து “பேஸ்ட்’ மாதிரி அரைத்து எடுக்க வேண்டும்.
அதை 20 லிட்டர் மாட்டு கோமியத்துடன் கலந்துவைக்க வேண்டும்.
பிறகு நன்றாக கொதிக்க வைத்து 48 மணிநேரத்திற்கு பிறகு அதை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து நேரடியாக பருத்தி செடிகளில் தெளிக்க வேண்டும்.
விவசாயிகள் இதை முறைப்படி செய்தால் மகசூல் அதிகரிப்பதோடு தரமான பஞ்சினை பெற்று பயன் அடையலாம். பூச்சிகளும் அண்டாது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories