பருப்பு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு புதியத் திட்டம் அறிமுகம்!

பருப்பு வகைகளின் உற்பத்தியில் தன்னிறைவை அடையும் நோக்கத்தோடு, காரீப் 2021ம் பருவத்தில் அமல்படுத்து வதற்கான சிறப்பு காரீஃப் உத்தியை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வடிவமைத்துள்ளது மற்றும்

புதியத் திட்டம் (New project)
துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பின் உற்பத்தியை மேம்படுத்துவது மற்றும் விளைநிலங்களை அதிகரிப்பது தொடர்பான விரிவானத் திட்டம், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மத்திய விதை முகமைகள் அல்லது மாநிலங்களிடம் இருக்கும் அதிக விளைச்சலைத் தரக்கூடிய விதை வகைகள் இலவசமாக விநியோகிக்கப்படும்.

விதைகள் தொகுப்பு (Collection of seeds)
எதிர்வரும் காரீஃப் 2021ம் பருவத்தில் பயிரிடுவதற்காக ரூ.82 கோடி மதிப்பில் 20 லட்சத்து 27 ஆயிரம் விதைகள் அடங்கியக் கிட்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது.அதாவது கடந்த 2020-21ம் நிதியாண்டில் வழங்கியதை விட இது 10 மடங்கு அதிகம் ஆகும் எனவே,

மத்திய அரசே வழங்கும் (Provided by the Central Government)
பருப்பு வகைகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, 4.05 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்படுவதற்கு இந்த சிறிய கிட்களுக்கான மொத்த செலவை மத்திய அரசே ஏற்கும்.
இதைத் தவிர மாநிலங்களால் மேற்கொள்ளப்படும் ஊடுபயிர் முறை மற்றும் விளைநிலங்களை விரிவுபடுத்துவது போன்ற பணிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு தொடர்ந்து நடைபெறும்.

ஜூன் 15ம் தேதிக்குள் (By June 15th)
வரும் ஜூன் 15ம் தேதிக்குள் மாவட்ட அளவில் அனுமதி அளிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய/ மாநில முகமைகள் வாயிலாக இந்த கிட்கள் வழங்கப்படும்.

பருப்புகள் இறக்குமதி (Imports of dal)
இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சுமார் 4 லட்சம் டன் துவரம் பருப்பு, 0.6 லட்சம் டன் பயத்தம் பருப்பு மற்றும் சுமார் 3 லட்சம் டன் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை இந்தியா தற்போது இறக்குமதி செய்து வருகிறது.

பருப்பு உற்பத்தி அதிகரிக்கும் (Increase dalproduction)
இந்த சிறப்புத் திட்டத்தின் வாயிலாக இந்த மூன்று வகை பருப்புகளின் உற்பத்தி அதிகரிக்கப்படுவதுடன், இறக்குமதியின் மீதான சுமை குறைக்கப்பட்டு, பருப்பு வகைகளின் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடைய முடியும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories