பருவமற்ற காலத்தில் முருங்கை சாகுபடி

பருவமற்ற காலத்தில் முருங்கை சாகுபடி

அறிமுகம்

முருங்கை தென் இந்தியாவில் பயிரிடப்படும் காய்கறிகளில் ஒரு முக்கியமான பயிராகும். இது மனித குலத்தின் (குறிப்பாக குழந்தைகளின்) ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. பல வகை பயன்பாடுகளைக் கொண்ட முருங்கை அதிக அளவில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், மாவுச்சத்து மற்றும் பல வகையான சத்துக்களைக் கொண்டுள்ளது. அதிக எண்ணெய் அளவினைப் பெற்று மருத்துவக் குணம் கொண்ட முருங்கை, நீர் சுத்திகரிப்பிற்கு பயன்படுகிறது. இந்தியாவில் 30,000 ஹெக்டர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இதிலிருந்து 12 இலட்சம் டன் காய்கள் பெறப்படுகின்றன. மரவகை மற்றும் செடி வகை முருங்கைகள் தமிழகத்தில் பரவலாக வளர்க்கப்படுகிறது. இது மார்ச்-ஆகஸ்டு மாதங்களில் காய்க்கத் துவங்கும். இந்த காலத்தில் ஒரு கிலோ காய் ரூ. 5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஒரு கிலோ காய் ரூ. 15-20 வரை விற்கப்படுகிறது. இது காய்களின் உற்பத்தி திறன் குறைவதால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி வரை அதிக மழை, குறைந்த வெப்பநிலையினால் பூக்கள் அதிக அளவில் உதிர்கின்றன. இதனால் உற்பத்தியும் குறைகின்றது. இதனையே பருவமற்ற காலம் என்று அழைக்கின்றோம்.

இந்த கால கட்டத்தில் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பல பணிடிகைகள் வருவதால் முருங்கை காயின் தேவையும் அதிகமாக உள்ளது. இந்த மாதங்களில் ஒரு கிலோ முருங்கை காயின் விலை ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது அதிகம் காய்க்கும் (மார்ச் முதல் ஆகஸ்டு வரை) கால கட்டத்தை விட காய்கள் குறைவாக உள்ள போது அதிக விலையினால் நல்ல இலாபம் விவசாயிகளுக்கு கிடைக்கின்றது.

பொதுவாக முருங்கை பனி காலத்தை விட வெயில் காலங்களில் நன்கு வளர்ந்து காய்க்கும். எனவே நவம்பர் முதல் பிப்ரவரி வரை காய்கள் குறைவாகவே கிடைக்கின்றன. இந்த காலத்தில் பூ மற்றும் காய் பிடிப்பை அதிகரிக்க ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

 1. கால இடைவெளியில் விதை விதைத்து பின்பு வளர்ச்சி ஊக்கிகள் / வேதிப் பொருட்களைத் தெளித்தல்
 2. கவாத்து செய்த பின் வேதிப்பொருட்கள் அல்லது வளர்ச்சி ஊக்கிகளைத் தெளித்தல்

விதை விதைத்த காலநிலைகள்

 • M1 – ஆகஸ்ட் – 15
 • M2 – ஏப்ரல் – 30
 • M3 – மே – 30
 • M4 – ஜீன் – 30
 • M5 – ஜீலை – 15

இவ்வாறு விதைத்த பின், பொட்டாசியம் நைட்ரேட், சேலிசிலிக் அமிலம், கால்சியம் குளோரைடு மற்றும் நைட்ரோபென்ஜின் போன்ற மருந்துகள் தெளிக்க வேண்டும்.

மேற்கூறிய காலங்களில் விதைகளை விதைக்க, 1 கியூபிக் அடி அளவில் குழி எடுத்த பின் தொழு உரத்தினைக் கொண்டு நிரப்ப வேண்டும். பின்பு ஒரு குழியில் இரணர்டு விதை என்ற அளவில் விதைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.

விதைத்த 10 நாட்களில் விதைகள் முளைக்கத் தொடங்கும். செடி 2 அடி வளர்ந்த பின்பு நுனியை கிள்ள வேண்டும். பின்பு 25 நாட்கள் கழித்து அடுத்து நுனி கிள்ள வேண்டும். இதனால் வளர்ந்த மரமானது குடை போன்று தோன்றி பூ மற்றும் காய்களைத் தாங்கி வளர ஏற்றதாக இருக்கும். இந்த நிலையில் வேதிப்பொருட்களின் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

 • S1 – மருந்து பயன்படுத்தாத நிலை
 • S2 – 0.5 சதம் பொட்டாசியம் நைட்ரேட்
 • S3 – 0.1 சதம் சாலிசிலிக் அமிலம்
 • S4-0.5 சதம் கால்சியம் குளோரைடு
 • S5 – 0.5 சதம் நைட்ரோ பென்சீனர்

மேற்கூறியவற்றை ஆகஸ்டு மாத இறுதியிலும், செப்டம்பர் முதல் வாரத்திலும் செடிகளுக்குத் தெளிக்க வேண்டும். அடுத்து, முதலாவதாக தெளித்ததிலிருந்து 15 நாட்கள் கழித்து தெளிக்க வேண்டும்.

முருங்கை செடியானது விதைத்து 88-91 நாட்களில் பூக்கத் துவங்கும். மே மாதம் விதைத்த செடிகளில் நைட்ரோ பென்சீன் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட் தெளிப்பதால் அதிகமான பூக்கள் மற்றும் பூங்கொத்துகள் பெறலாம். மேலும், புரதங்களின் சேகரிப்பினாலும் அதிக பூக்கள் தோன்றியிருக்கலாம். இவ்வாறு பூ பிடிப்பினால், காய்ப்புத்தன்மை, ஒரு கொத்தில் காய்களின் எண்ணிக்கை, ஒரு மரத்தில் காய்களின் எண்ணிக்கை மற்றும் காய் எடை ஆகியவை அதிகரித்து மகசூல் அதிகரிக்கக் காரணமாகின்றன. இவ்வாறு கிடைக்கும் காய்கள் சந்தையில் அதிக விலை பெறுகின்றது. இவ்வாறு பூக்கும் பொழுது மழை இருப்பின் பூக்கள் உதிரும். ஆனால் மழையானது காய்கள் தோன்ற ஆரம்பித்த பின் பெய்தால் காய் பிடிக்கும் திறனோ அல்லது மகசூலோ பாதிக்கப்படுவதில்லை. இந்தக் காய்கள் அதிக விலை பெறுவதால் விவசாயிகள் அதிக இலாபம் (ரூ. 1 முதல் 7 வரை) பெற இயலும்.

 

ஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories