வயலில் விளைந்த நெல் விதைகளை எப்படி விதைக்க பயன்படுத்துவது?
விதை நடவின் போது ஒரு வாளியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் கோழி முட்டையை இ ட வேண்டும். அப்போது அது தண்ணீரில் மூழ்கிவிடும். பிறகு தண்ணீரில் சிறிது சிறிதாக கல்லுப்பைக் கரைத்துக் கொண்டு வந்தால் முட்டையானது மிதக்க ஆரம்பிக்கும்.
முட்டையின் மேற்பாகம் அதாவது ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு மேற்பகுதி தெரியும் போது உப்பு கரைப்பது நிறுத்திவிட்டு நெல் விதைகளை இட்டு கலக்கி பிறகு உப்பு கரைசலில் மிதக்கும் விதைகளை நீக்கிவிட வேண்டும்.
உப்புக் கரைசலில் மூழ்கிய விதைகளை மட்டுமே எடுத்து அவற்றை பலமுறை நல்ல தண்ணீரில் கழுவிய பிறகு விதைப்பதற்கு பயன்படுத்தலாம்.
ரோஜா செடி வளர்க்க எந்த மண் சிறந்தது?
ரோஜா செடிகளை வளர்க்க நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது குறுமண் நிலம் ஏற்றது.
பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் முன்னரே 45 சென்டிமீட்டர் நீள, அகல, ஆழமுள்ள குழிகளை எடுத்து ஆறவிட்டு பிறகு செடிகளை நடவு செய்ய வேண்டும்.
பர்மா தேக்கு நடவு செய்வது எப்படி?
பர்மா தேக்கு கன்றுகள் நடவு செய்தால் கிராம நிர்வாக அதிகாரிக்கும் ,வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கன்றுக்கும் 6 அடி இடைவெளி விட்டு நடவு செய்த 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடிக்கடி பக்க கிளைகளை அகற்ற வேண்டும். இவற்றை நடவு செய்தது முதல் 12 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும்.
பருத்தியில் என்ன ஊடு பயிரிடலாம்?
பருத்தி விதைத்து 90 நாட்களுக்குப் பிறகு ஊடுபயிர் செய்யலாம்.
இறவை பருத்தி வெண்டை, முள்ளங்கி போன்ற காய்கறிகள் ,பச்சைப் பயறு ,உளுந்து ,காராமணி போன்ற பயிர் வகை பயிர்களையும் ப ருத்தி வரிசைகளுக்கு ஊடுபயிராக பயிரிடலாம்.
வாய்க்கால் வரப்பு பயிர்களாக சூரியகாந்தி ,மக்காச்சோளம்,தினை போன்றவை பயிரிடலாம்.
மானாவாரியில் கொத்தமல்லி, பயறு வகைகள், சூரியகாந்தி போன்றவை ஊடுபயிராக பயிரிடலாம்.
கலப்பின மாடுகள் வளர்ப்பதன் மூலம் என்ன நன்மைகள் உள்ளன?
கலப்பின மாடுகள் அதிக பால் கொடுக்கும். கன்று போடும் இடைவெளி12 முதல் 14 மாதமாகும்.
இந்த மாடுகள் பருவத்திற்கு வர குறைவான நாட்களே ஆகும் .அதாவது 12 முதல் 18 மாததி ல் பருவத்திற்கு வரும்.
இந்த மாடுகள் அமைதியாக காணப்படுவதால் கண்டிப்பது எளிமையாக இருக்கும்