பலா எப்படி பயிரிடுவது?

 

ரகம்

சிங்கப்பூர் பலா, வெளி பல , பண்ருட்டி ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்யலாம்.

மணல்

வண்டல் மண், செம்மண் பலா சிறப்பாக விளையும் .நிலம் ஆழமாகவும் நல்ல வடிகால் வசதி உள்ளதாகவும் இருக்கவேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்றாக உழுது ஒரு மீட்டர் அகலம் ஒரு மீட்டர் ஆழமுள்ள குழிகளை எடுக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு குழியிலும் செடிகள் நடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு ஒரு நடவு குழியில் 75% தொழுவுரம் 15% மண்புழு உரம் 5% செம்மண் 5 சதவீதம் வேப்பம் பிண்ணாக்கு கலந்து குழியை நிரப்பி லேசாக தண்ணீர் ஊற்றி ஆற விட வேண்டும்.

விதைத்தல்
ஒட்டுச் செடிகள் 8x 8 மீட்டர் இடைவெளியில் குழிகளின் மையத்தில்நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம் ஒரு மாதம் வரை வாரம் ஒரு முறையும் அதன் பிறகு வாரம் ஒரு முறையும் தண்ணீர் கொடுக்க வேண்டும். இரண்டாவது ஆண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் போதுமானது மூன்றாம் ஆண்டு இருந்தால்தண்ணீர் மட்டுமே தர வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பருவமழையை போதும் நீர் பாய்ச்சத் தேவையில்லை .

உரங்கள்

மரம் ஒன்றிற்கு ஒரு வருடத்திற்குள் தொழு உரம் 10.0 கிலோ ,தழைச்சத்து 0.5 கிலோ மணிச்சத்து 0.08 கிலோ, சாம்பல் சத்து 0.10 கிலோ, கொடுக்க வேண்டும் .ஆறு வருடங்களுக்கு பிறகு 50.0 கிலோ தழைச்சத்து, 0.75 கிலோ மணிச்சத்து, 0.45 கிலோ சாம்பல் சத்து 0.50 கிலோ கொடுக்க வேண்டும்.

பயன்கள்

பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும்.

பலாக்கொட்டை நல்லதொரு உணவாகும். இதன் கொட்டையை மாவாக்கி உணவாக உண்ணலாம்.

பலா இலையின் கொழுந்தை அரைத்து சிரங்கு மீது பூசினால் சிரங்கு விரைவில் ஆறிவிடும்.

பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் மாறிவிடும்.

பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும் நீர் வேட்கையும்நீங்கும்.

பலா மரத்தில் வரும் பாலினை எடுத்து நெறிகட்டிகள் நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது தடவிவர அவை பழுத்து உடையும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories