பழ ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த

பழ ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த
பழ ஈயை கட்டுப்படுத்துவதில் அரசு என்ற புதுப்பட்டி சேர்ந்த விவசாயின் சாதனை
தண்ணீர் பிடிக்கும் பாட்டிலின் மூடியில் சிறிய துளையிட்டு அவற்றில் நூல் அல்லது சிறிய கம்பிளை பாட்டிலில் விட்டு கட்டி அதில் மாத்திரையை கட்டி உள்ளார். பிறகு பழ ஈ போகும் அளவிற்கு தண்ணீர் பாட்டிலில் வட்டவடிவ துளைகள் இரண்டு பக்கமும் போட்டுள்ளார்
ஈக்கன் விழுந்து உள்ளேயே சுற்றி பிறகு இறந்து விடுகிறது இது மிக எளிதாகவும் உள்ளது விவசாயிகள் மாத்திரை மட்டும் வாங்கி இவ்வாறு தண்ணீர் பாட்டிலில் கட்டலாம் .
மேலும் பழ ஈ தாக்கப்பட்ட காய்கள் மற்றும் பழங்களை பிடுங்கி அழிக்கவேண்டும்.
இனக்கவர்ச்சிப்பொறி ஒரு ஏக்கருக்கு 5 இடங்களில் வைத்து பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
விளக்குப்பொறி ஒரு ஏக்கருக்கு ஒரு இடத்தில் வைத்து பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
இனக்கவர்ச்சிப் பொறியை பயன்படுத்தும் முறை
பழ ஈக்களை கவரக்கூடிய இனக்கவர்ச்சி பொறியை ஏக்கருக்கு 5 முதல் 6 என்ற எண்ணிக்கையில் நிழல் பகுதியில் ஆடாமல் கட்டிவைத்து பழ ஈக்களை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.
இனக்கவர்ச்சி பொறிகளை பூ பூக்கும் காலம் தொடங்கி அறுவடை காலம் வரை பயன்படுத்த வேண்டும்.
இந்த இனக்கவர்ச்சி பொறிகளில் பெண்பூச்சி இருப்பது போல மாத்திரை தயாரித்து இருப்பதால் ஆண் ஈக்களை கவர்ந்து இழுக்கிறது.
கவர்ந்திழுக்கப்பட்ட ஆண் ஈக்கள் பொறியில் விழுந்து இறந்துவிடும். இதனால் இனப்பெருக்கம் தடைபெற்று பூச்சிகளின் தாக்கம் குறைந்துவிடும்.
இந்த இனக்கவர்ச்சி பொறிகளில் உள்ள மாத்திரைகளை மட்டும் 35 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இறந்த பூச்சிகளை 1 அடிக்கு கீழ் மண்ணில் புதைத்துவிட வேண்டும்.
அல்லது
நிம்பிசிட் 3 மி.லி 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து 50 சதவீதம் காய் காய்த்தவுடன் மற்றும் 35 நாட்கள் கழித்து தெளிக்க வேண்டும்
இந்த இனக்கவர்ச்சி பொறி காய்கறி பயிர்கள் கத்தரி, தக்காளி , கோவை , புடலை , பாகல், முருங்கை, கொய்யா, எலும்பிச்சை போன்ற பயிர்களுக்கு தனித்தனியாக மாத்திரை உள்ளது செலவு குறைவுதான் அதிக பூத்தி தாக்குதலை குறைக்கலம் தேவை என்றால்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories