பெரும்பாலும் மக்களின் முக்கிய உணவாக அரிசிகள்தான் உள்ளன இந்த அரிசி கள் நமக்கு நெல்லில் இருந்து கிடைக்கின்றன அதிலும் பாரம்பரிய நெல் ரகங்களில் பலவிதமான மருத்துவ குணங்களும் காணப்படுகின்றன அப்படிப்பட்ட சிறப்புமிக்க பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றான பூங்கார் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பாரம்பரிய நெல் ரகங்களில் குறுகிய காலப் பயிர். இந்த பூங்கான் ரகம். எல்லா பருவங்களுக்கும் ஏற்ற ரகம் . தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண் வகைகளும் ஏற்ற ரகம் இதை ஆண்டுகளுக்கு மூன்று முறை சாகுபடி செய்யலாம்.
பூங்கார் நெல் ரகத்தின் வயது 70 நாட்கள் இருப்பினும் ஒரு சில இடங்களில் 70 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிறது இது சிவந்த நிறமுடைய நெல் ரகம் அரிசியும் சிவப்புதான் நேரடி விதைப்புக்கு ஏற்ற ரகம்.
பாரம்பரிய நெல் ரகங்களில் மழை வெள்ளத்தை தாங்கி வளரக்கூடியது. இந்த பூங்கா விதைப்பு செய்த நாற்றங்கால் அல்லது வயலில் 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வடியாமல் இருந்தாலும் முளைக்கும் திறனும் முளைத்த விதைகள் பாதிக்கப்படாமல் வளரும் திறனும் இந்த நெல்லுக்கு உண்டு கதிர் முற்றி அறுவடை நேரத்தில் தொடர் மழை பெய்தாலும் மழை நீர் சூழ்ந்திருக்கும் காலத்தில் நெல் கதிர் தண்ணீருக்குள் இருந்தாலும் நெல் விதைகள் முளைக்காது.
குறைந்தபட்சம் 40 நாள் உறக்கத்துக்கு பிறகே முளைக்கும்.
இந்த ரக அரிசியை பெண்கள் மகப்பேறு காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.