பார்த்தீனியம் செடி! இதை கட்டுப்படுத்த மிகச்சிறந்த டிப்ஸ்!

 

பார்த்தீனியம் நச்சு செடி எல்லாவிதமான சூழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன் உடையது. இது விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் நச்சு ஏற்படுத்தக்கூடியது. இந்த நச்சு செடியை அழிக்கும் முறையை பற்றி இங்கு காணலாம்.

இந்த நச்சு செடி முதலில் தரிசு நிலங்களில் பரவியிருந்தது .தற்போது விளைநிலங்களையும் ஆக்கிரமித்து உள்ளது. இந்த நச்சு செடி ஆண்டிற்கு மூன்று முறை வளரும் தன்மை உடையது. சுமார் 10,000 விதைகள் ஒரு செடியிலிருந்து உற்பத்தியாகின்றது. இந்த விதைகள் அனைத்தும் நூறு சதவீத முளைப்புத்திறன் கொண்ட விதைகளை மண்ணில் நீண்ட காலம் வரை பாதிப்படையாமல் இருக்கும்.

இது நச்சுத்தன்மை வாய்ந்த செடி…. இதனால் கால்நடைகள் பார்த்தீனியம் செடிகளை உண்ணாது. இருப்பின் அந்த கால்நடை நடக்கும்போது அல்லது அதனை நுகரும் போது பரவுகிறது. அதன்பிறகு கால்நடைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது .எருமைகளுக்கும்,அதன் கன்றுகளுக்கு உணவாக கொடுக்கும்பொழுது குறைவான மற்றும் கடுமையான நச்சுத்தன்மை உடலில் ஏற்பட்டு வாய்ப்புகள் மற்றும் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகம் மற்றும் ஈரல் பகுதிகளில் ஏற்படும் நச்சுத் தன்மையால் கால்நடைகளில் மலட்டுதன்மை ஏற்படுத்துகிறது .பார்த்தீனியம் பரவியுள்ள பகுதிகளில் மேயும் கால்நடைகளிடம் இருந்து பெறப்படும் பால் மனிதர்களுக்கும் தீமை விளைவிக்கக் கூடியது.

இதை கட்டுப்படுத்த மூன்று கிலோ சுண்ணாம்பு ,,பத்து லிட்டர் தண்ணீர் 4 கிலோ உப்பு ,3 லிட்டர் கோமியம், 2 லிட்டர் வேப்ப எண்ணை கொண்ட கரைசலை தயாரித்து ,கலைகள் மீது தெளித்தால்பார்த்தீனியம் கட்டுக்குள் வரும். மேலும் பூ பூப்பதற்கு முன்பு கையுறை அணிந்து செடிகளை வேருடன் பிடுங்கி எரித்துவிட வேண்டும். இதனால் விதை பரவுவது தடுக்கப்படும். மூடாக்கு அமைத்து கட்டுப்படுத்தலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories