பார்த்தீனியம் தோற்றம் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்……

பார்த்தீனியத்தின் தோற்றம்:

பார்த்தீனியம் நட்சத்திர களை, கேரட் களை, வெள்ளை தொட்டி, மேல் வெள்ளை என அழைக்கப்படுகிறது. பார்த்தீனிய களை 1956-ல் மகாராஷ்ராவில் கோதுமை இறக்குமதி செய்த போது ஊடுறுவியதாக கருதப்படுகிறது. இக் களைச்செடிகள்
முட்டை வடிவமான இலைகளை கொண்டது மற்றும் இலையின் மேல் வெள்ளை நிற ரோமங்கள் பெற்றுள்ளது. இச்செடிகள் பொதுவாக அதிக ஆழம் கொண்ட ஆணிவேர் அமைப்புடையது. தண்டு மற்றும் இலையின் மேல் வெள்ளை நிற ரோமங்கள் பெற்றுள்ளது. இச்செடிகள் பொதுவாக அதிக ஆழம் கொண்ட ஆணிவேர் அமைப்புடையது. தண்டு மற்றும் இலையின் மேல் வெள்ளை நிற ரோமங்கள் துல்லியமாக காணப்படும். இச் செடிகள் பார்ப்பதற்கு நீலம் (அ) சாம்பல் நிறத்திலும், பூக்கள் வெள்ளை நிறத்தில் செடிகளின் உச்சிப்பகுதியில் கொத்துக் கொத்தாகக் காணப்படும். இதன் விதைகள் நான்கே வாரத்தில் நிலத்தில் விழுந்து முளைத்து மீண்டும் பூத்து விதைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது மழை,வறட்சி இரண்டையும் தாங்கி வளரக் கூடியது.

பார்த்தீனியத்தால் ஏற்படும் பாதிப்புகள்

பார்த்தீனியம் ஓர் நச்சுக்களை. இது மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. இக்களையானது, ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய விஷமுள்ள களைச் செடியாக பரவியுள்ளது. இவை ஆஸ்துமா, தொழு நோய் மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. கால்நடைகள் இக்களைச் செடியை உண்ணாது. அது கடந்து செல்லும் போது, மாட்டின் மடிப்பகுதி இக்களைச் செடியால் பாதிக்கப்பட்டு ஜுரத்தினை உண்டாக்குகிறது. மேலும் கால்நடையின் வாய் மற்றும் குடல் பகுதிகள் அல்சர் புண்ணை உண்டுபண்ணுகிறது. இச்செடியின் மகரந்த தூள்கள் மனிதன் மற்றும் கால்நடைக்கு ஒவ்வாமையை உண்டாக்குகின்றன.

பார்த்தீனியம் கட்டுப்படுத்தும் முறைகள்:

பொது இடங்களில் மற்றும் பயிரிடாத நிலங்களில் இருக்கும் பிற தாவரங்கள், இயற்கை சூழலைப் பாதுகாக்க வேண்டும்.

மெக்ஸிகன் வண்டுகள் மழைக்காலங்களில் அதிக அளவில் உற்பத்தியாகும். இவற்றினை சேகதித்து பார்தீனியம் மிகுந்த பகுதிகளில் இட வேண்டும்.

கைகளையாக அகற்றும் போது தோழிலாளர்கள், கையுறை, கால் உறை அணிந்து கொண்டு அகற்றுவதுடன், தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பார்த்தீனியம் அதிக அளவில் காணப்படும் பகுதிகளில் அட்ரசின் என்ற களைக்கொல்லியை 2.5 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். (அல்லது)

2, 4 டி சோடியம் உப்பு 10 கிராமுடன் 20 கிராம் அம்மோனியம் சல்பேட் மற்றும் 2 மிலி டீபால் ஒரு லிட்டர் தண்ணீரில் தெளிக்க வேண்டும். (அல்லது)

ஒரு லிட்டர் தண்ணீரில் கிளைபோசேட் 15 மிலியுடன் 20 கிராம் அம்மோனியம் சல்பேட் மற்றும் 2 மிலி டீ பால் கலந்து பூக்கும் முன் தெளித்திட வேண்டும். (அல்லது)

மெட்ரீபூசின் 4 கிராம் 2 மிலி டீ பாலுடன் ஒரு லிட்டர் தண்ணிரில் கலந்து தெளித்துக் இக் களாஇகளை கட்டுப்படுத்தலாம்.

பார்த்தீனியத்தை மண்புழு உரமாக கீழ்கண்டவாறு மாற்றி பயன்படுத்தலாம்.

மண்புழு கம்போஸ்ட் தயாரித்தல்:

பார்த்தீனியம் பூக்கும் முன் செடிகளை சேகரித்து அவற்றை 5-10 செ.மீ உயரத்திற்கு கீழிருந்து ஐந்து அடுக்கு, அடுக்க வேண்டும் இவற்றின் மேல் 10% பசுஞ் சாண கரைசலை சமமாக தெளிக்க வேண்டும். இவற்றை பத்து நாட்கள் மக்க வைத்து, பின் 250-300 மண் புழுக்களை இம்மக்கிய உரத்தில் விட வேண்டும்,இவற்றை 45-60 நாட்கள் வரை மக்கவைத்து மண் மண்புழு உரமாக பயன்படுத்தலாம்.

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories