பார்த்தீனியம் நச்சு செடி எல்லாவிதமான சூழ்நிலையிலும் தாங்கி வளரும் திறன் உடையது இது விவசாய நிலங்களை ஆக்கிரமித்து மட்டுமில்லாமல் கால்நடைகளுக்கு நச்சுஏற்படுத்தக்கூடியது.
இந்த நச்சு செடி முதலில் தரிசு நிலங்களில் பரவியிருந்தது . தற்போது விளைநிலங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இந்த நச்சு செடி ஆண்டிற்கு மூன்று முறை வளரும் தன்மை உடையது சுமார் 10,000 விதைகள் ஒரு செடியிலிருந்து உற்பத்தியாகின்றது இந்த விதைகள் அனைத்தும் 100% முளைப்பு திறன் கொண்டவை விதைகள் மண்ணில் நீண்ட காலம் வரை பாதிப்படையாமல் இருக்கும்.
இது நச்சுத்தன்மை வாய்ந்த செடி அதனால் கால்நடைகள் பார்த்தீனியச் செடிகளை உண்ணாது இருப்பினும் அந்த நச்சு தன்மைகால்நடைகள் பார்த்தீனியம் செடிகளின் வழியாக நடக்கும் போது அல்லதுஅதனை நுகரும் போதும் பரவுகிறது. அதன்பிறகு கால்நடைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது உணவாகக் கொடுக்கும் பொழுது குறைவான மற்றும் கடுமையான நச்சுத்தன்மை உடலில் ஏற்பட்ட வாய் பகுதிகள் மற்றும் உடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகின்றன சிறுநீரகம் மற்றும் ஈரல் பகுதிகளில் ஏற்படும் நச்சுத் தன்மையால் கால்நடைகளில் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. பார்த்தீனியம் பரவியுள்ள தொகுதிகளிலும் கால்நடைகளிடம் இருந்து பெறப்படும் பால் மனிதர்களுக்கு தீமை விளைவிக்கக் கூடியவை.