#பார்த்தீனிய களைகயைக் கட்டுப்படுத்த

#பார்த்தீனிய களைகயைக் கட்டுப்படுத்த
பார்த்தீனியம் பயிர் விளைச்சலைப் பாதிக்கும் ஒரு களைச்செடி மட்டுமல்லாத மனிதனுக்கும் கால்நடைகளுக்கும் தீமை செய்யும் விஷக் செடியும் ஆகும். இவ்விசக் களைச்செடி சாகுபடி நிலங்களில் பயிர்விளைச்சலைப் பாதிப்பதோடு தரிசு நிலங்களிலும் வேகமாகப் பரவி வளர்வதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். இச்செடியின் விதைகள் காற்றின் மூலம் எளிதில் விரைவாகப் பரவுகின்றன. மேலும் இது வறட்சி மற்றும் சதுப்புத்தன்மையைத் தாங்கி வளரக்கூடிய தன்மையைப் பெற்றிருப்பதால், எல்லா இடங்களுக்கும் விரைவாகப் பரவிவிடுகின்றது.
இவ்விசக்களைச்செடி மனிதனுக்கு முதலில் ஒவ்வாமை, தோல் வியாதி, சைனஸ் ஆஸ்த்துமா போன்ற நோய்களை உண்டுபண்ணி தொல்லைதரும்.
இத்தகைய விஷத்தன்மை வாய்ந்த களைச்செடியை நன்கு மக்கச்செய்து பயிருக்கு உரமாக இட்டு அதிக பயிர் விளைச்சல் பெறலாம். முதலில் 43 : 1 என்று இருந்த கரிம தழைச்சத்துக்களின் விகிதம் நன்கு மக்கியவுடன். அதன் விகிதம் வெகுவாகக் குறைந்துவிடுகிறது. இதனால் சாகுபடி பயிர்கள் சத்துக்களை எளிதில் பயன் படுத்தும் நிலையை அடைகின்றது.
பார்த்தீனியத்தை மக்கச் செய்ய தமிழ் நாடு விவசாயப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிர்கலவை ( புளுரோட்டஸ் டிரைக்கோடெர்மா ) சிபாரிசு செய்யப்படுகிறது.
இடத்தேர்வு : நிழற்பாங்கான சற்று மேடான வடிகால் வசதி உடைய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். முக்கியமாக தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தேவையானவை : ( ஓரு டன் உரம் தயாரிக்க ) : பார்த்தீனியம் விஷச்செடி ஒரு டன், நுண்ணுயிர்க்கலவை 5 பாட்டில்கள், யூரியா-5 கிலோ.
மக்கவைக்கும் முறை : முதலில் பார்த்தீனியச் செடிகளை 10 முதல் 15 செ.மீ. நீளத்தில் துண்டு துண்டாக வெட்ட வேண்டும். பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் ஒரு அடுக்குக்கு 100 கிலோ என்ற வீதம் 5 மீ ஓ 1.5 மீ பரப்பில் முதல் அடுக்கைப் பரப்பிவிட வேண்டும். பின் மக்கவைக்கும் நுண்ணுயிர்கலவை ஒரு பாட்டில் என்ற அளவில் பரப்பி வைக்கப்பட்ட பார்த்தீனியத்தின் மேல் சீராகத் தூவ வேண்டும். அதன்மேல் மறுபடியும் அடுத்த 100 கிலோ பார்த்தீனியச் செடி துண்டுகளைப் பரப்ப வேண்டும்.பிறகு இப்பரப்பின்மேல் ஒருகிலோ யூரியாவை சீராகத் தூவிவிட வேண்டும். இவ்வாறு பார்த்தீனியம் யூரியா என்று அடுக்கிக் கொண்டே வரவேண்டும்.
சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை இவ்வாறு அடுக்க வேண்டும். அடுக்கி முடித்தபின் இதன்மேல் பூவாளியால் தண்ணீர் தெளித்து 50 முதல் 60 சத ஈரப்பதத்தை ஏற்படுத்த வேண்டும். கடை சியில் அடுக்கின் மேல் சிறிதளவு மண்பூச்சு செய்ய வேண்டும்.
அடிக்கடி தண்ணீர் தெளித்து 50 முதல் 60 சத ஈரப்பதத்தைப் பராமரித்து வரவேண்டும். இவ்வாறு தயார் செய்யப்பட்டதை 20 லிருந்து 25 நாட்கள் கழித்து ஒருமுறை அடுக்குகளைப் பிரித்து நன்கு கிளறிவிட வேண்டும். பிறகு மறுபடியும் அதனை அப்படியே ஒரு மீட்டர் உயரத்திற்கு அடுக்கி மண்ணால் பூசிவிட்டு மேற்சொன்ன ஈரப்பதத்தைப் பராமரித்து வந்தால் 40 முதல் 50 வது நாட்களில் பார்த்தீனியம் விஷச்செடிகளை நன்கு மக்கி மரக்கலர் நிறத்தில் இருக்கும்.
அதனைக் கிளறிவிட்டு நிழலில் சிறிது நேரம் உலர்த்தி பயிர்களுக்கு இடலாம். பார்த்தீனியம் மக்கிய உரத்தில் தொழு உரத்தைவிட பல மடங்கு அதிக அளவு உரச்சத்துக்கள் உள்ளன.இதனை ரசாயன உரங்களோடு சேர்த்து பயிருக்கு இடுவதால் பயிர் விளைச்சல் அதிகரிப்பதோடு, உரச்செலவும் குறைக்கப்படுகிறது.
பார்த்தீனியத்தை மக்கச்செய்யும் நுண்ணுயிர்கலவையைப் பெற அணுக வேண்டிய முகவரி பேராசிரியர் மற்றும் தலைவர் சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3
தென்னந் தோப்பில் பார்த்தீனியம் களைச்செடிகள் மண்டிக்கிடக்கின்றன இதனைக் கட்டுப்படுத்த என்னசெய்யவேண்டும் என்று பார்க்கலாம்
பார்த்தீனியம் களைச்செடிகள் நிலத்தில் சிறிது ஈரம் இருந்தாலும் உடனே முளைக்கும் தன்மையுடையது . இச்செடி எல்லா பருவத்திலும் பூத்து அதிக அளவில் விதைகளை உற்பத்தி செய்து ( செடி ஒன்றுக்கு 10000 விதைகள் வீதம்) எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் காற்றின் மூலமாகவும் பாசன நீர் மூலமாகவும் ஒர்இடத்தில் இருந்து மற்றொறு இடத்திற்கு எளிதில் பரவுகிறது. இதன் விதைக்கு உறக்கநிலை கிடையாது. எனவே உடனே முளைக்கும் தன்னமையுடையது
இந்த களைச்செடிகளின் இலைகள் அல்லது மகரந்தம் தோலின் மீது பட்டால் மனிதர்களுக்கு தோலில் அரிப்பு ஏற்பட்டு கொப்பங்களும் சிலருக்கு ஆஸ்துமாவும் மூளை பாதிப்பும் ஏற்படுகிறது
பார்த்தீனியம் களைச்செடிகளை பூக்குமுன் வேருடன் கொத்தி எடுத்து எரித்து விடவேண்டும் நிலத்தை கோடைகாலத்தில் ஆழமாக உழுதுவெயிலில் காய வைத்து அழிக்க வேண்டும்
நன்கு வளர்ந்து விட்ட பார்த்தீனியம் செடிகளின் மேல் 20 சதம் உப்பு கரைசலை ( 10லிட்டர் தண்ணீருக்கு 2 கிலோ சாப்பாடு உப்பு) தயார் செய்து அதில் ஒருலிட்டர் கரைசலுக்கு ஒரு மில்லி சோப்புத்திரவத்தை கலந்து இலைகளின் மேல் நன்கு படும்படி டிதளிக்க வேண்டும்; இவ்வாறு தெளித்த 2முதல் 5 நாட்களில் களைச்செடிகள் காய்ந்துவிடும் அவற்றை வேருடன் வெட்டி எடுத்து எரித்து விட வேண்டும்
மழைக்குப்பின் முளைக்கும் பார்த்Pனியத்தை கட்டுப்படுத்த இரண்டாவது முறை உப்பு கரைசலை தெளிக்கவேண்டும். தவிர பார்த்Pனியத்தைப் கட்டுப்படுத்த
களைக்கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டும்
களைச்செடிகளை கொத்தி அப்புறப்படுத்தபட்ட நிலத்தில் மழைபெய்து போதுமான ஈரம் இருக்கும் தருணத்தில் களைகள் முளைக்கு முன் 360லிட்டர் தண்ணீருக்கு 800 கிராம் அட்ரசின் ( அட்ராடாப்) என்ற களைக்கொல்லியை நீரில் கலந்து நிலத்தில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும் அல்லது 2.4டி சோடியம் உப்பு ( பெர்னாக்சான் ) என்ற களைக்கொல்லி ஒரு கிலோவுடன் பாராகுவாட் என்ற களைக்கொல்லி ஒருலிட்டர் என்ற அளவில் சேர்த்து கலந்து 250 லிட்டர் தண்ணீர் சேர்த்து களைகளின் மேல் நன்கு படும்படிதெளித்து வளர்ந்துவிட்ட களைகளைக் கட்டுப்படுத்தலாம்;
தென்னந்தோப்பில் தொடர்ந்து மேலே குறிப்பிட்டுள்ளபடி பூ பூப்பதற்கு முன்பாக பார்த்தீனியம் செடிகளை கண்காணித்து அழித்து வரவேண்டும்
தற்பொழுது பார்த்தீனியத்தை தின்று அழிக்கக் கூடிய வண்டுகளும் உள்ளது அனைத்து வேளாண் அறிவியல் மையங்களிலும் கிடைக்கு

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories