பிவேரியா பேசியான இயற்கை பூஞ்சாண கொல்லி

பிவேரியா பேசியான இயற்கை பூஞ்சாண கொல்லி
பயன்கள்
சுற்றுபுற சூழல் பாதிப்படையாது இரசாயன பூச்சிகொல்லியின் விலை அதிகம். பிவேரியா பேசியான செலவு குறையும் நன்மை செய்யும் பூச்சிகள் பாது காக்கப்படும். மண் வளம் பாதுகாக்கப்படும் மனித மற்றும் கால்நடைகளின் நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. பழுக்களை கட்டுப்படுத்தும்.
பிவேரியா பேசியான தெளித்தவுடன் பூச்சிகளுக்கு நோயை உண்டாக்கி பயிர்களை உண்ணவிடாமல் தடுக்கும்
அன்புள்ள விவசாயிகளே தற்போழுது நாம விவசாயம் செய்துள்ள பயிர்கள் அனைத்திலும்
கால சூழ்நிலையின் காரணமாக வானம் மேக மூட்டமாக இருப்பதால் அவற்றில் சாறுஉறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலும் காய்ப்புழுக்களும் தாக்க ஆரம்பிக்கும்.
அவற்றை போக்க பிவேரியா பேசியான என்ற பூஞ்சாணகொல்லியின் தெளித்து பயிர்களை காப்போம். பிவேரியா பேசியான என்ற பூஞ்சாணகொல்லியை பயன்படுத்தும் பயிர்கள்
கத்தரி, தக்காளி, மிளகாய், அவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டப்பயறு, கடலை, ,நெல் கரும்பு, மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, சம்மங்கி, வாழை, மா, கொய்யா, சப்போட்டா போன்ற பயிர்களில் சாறுஉறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் மற்றும் காய்ப்புழு, பச்சைப்புழு, தென்னையை தாக்கும்.
காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு முதலியவற்றையும் பிவேரியா பேசியான என்ற பூஞ்சாணகொல்லி கட்டுப்படுத்தும் இவை ஒரு கிலோ விலை 130 ரூபாய் ஆகும்.
பிவேரியா பேசியானா, கட்டுப்படுத்தும்
புழுக்கள்,பூச்சிகள்
இலைப்பிணைக்கும் புழு, கூட்டுப்புழு, பச்சைபுழு, காய்ப்புழு, பச்சை தத்துப்பூச்சி, புகையான், அஸ்வினி, பழத்துளைப்பான் இலைச்சுருட்டுப்புழு, புரோட்Nனியா புழு, பயிர்களை குடையும் வண்டுகள் முதலியவற்றை கட்டுப்படுத்தும்
பிவேரியா பேசியானாஎன்ற பூஞ்சாண கொல்லி தெளிக்கும் முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து காலை, அல்லது மாலை வேளையில் செடியில் இலை, தண்டு.காய் போன்றா எல்லா இடத்திலும் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்
பயிர்களில் சிறிய பூச்சிகளாக இருக்கும் பொழுதே தெளிக்வேண்டும் தெளித் பிறகு 15 நாட்கள் இடைவெளியில் திரும்பவும் ஒரு முறை தெளிக்க வேண்டும்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories