பிவேரியா, மெட்டாரைசியம் ,டிரைக்கோடெர்மா ,சூடோமோனாஸ் – உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

பிவேரியா, மெட்டாரைசியம் ,டிரைக்கோடெர்மா ,சூடோமோனாஸ் – உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

பிவேரியா, மெட்டாரைசியம் ,டிரைக்கோடெர்மா ,சூடோமோனாஸ் – உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
உயிர்ப் பூச்சி மற்றும் பூசணக்கொல்லிகள் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
பிவேரியா ,ன்ற வெள்ளைப் பூசண உயிர்ப்பூச்சிக் கொல்லி
வெள்ளைப் பூசணம் அமெரிக்கன் காய்ப்புழு, புரோடினியா வைர முதுகுப்பூச்சி தத்துப்பூச்சி கூண் வண்டுகள், குரும்பை தாக்கும் இளங்குருத்துப்புழு போன்ற பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
மெட்டாரைசியம் என்ற உயிர் பூச்சிக் கொல்லி கட்டுப்படுத்தும் முக்கிய பூச்சிகள்
இதனை பச்சை பூசணம் என்று அழைப்பார்கள். இது தென்னையின் கண்டாமிருக வண்டு, நெற்பயிரைத்தாக்கும் புகையான், காலிஃப்ளவரைத் தாக்கும் வைர முதுகுப்பூச்சி, பணப்பயிரைத் தாக்கும் தண்டுப் புழுக்களை கட்டுப்படுத்த உதவும். கண்டாமிருக வண்டினை புழுப்பருவத்தில் கட்டுப்படுத்த அது முக்கியமாக வளரும் இடமான எருக்குழியில் கடப்பாரை கொண்டு குழி போட்டு இப்பூசணத்தினை நீரில் கரைத்து ஊற்றலாம்.
வெர்டிசிலியம் என்ற பூசணம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்
வெர்டிசிலியம் என்ற பூசணம் இலைப்பேன், தத்துப்பூச்சி, செதில் பூச்சி, வெள்ளை ஈ, மாவுப்பூச்சி போன்றசாறு உறிஞ்சும் பூச்சிகளின் பெருக்கத்தினை கட்டுப்படுத்துகிறது.
டிரைக்கோடெர்மா உயிர் பூசணக் கொல்லியினை உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
பயிர்களில் உண்டாகும் வேர் அழுகல், நாற்றமுகல் மற்றும் வாடல் நோயினை கட்டுப்படுத்துகிறது. மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதில் மக்கச் செய்கிறது. வேரின் வளர்ச்சியினை துரிதப்படுத்தி அடர்தியாக வளர உதவுகிறது. மேலும் பயிருக்கு தேவையான வளர்சியூக்கிளை உற்பத்தி செய்ய உதவுகிறது.
சூடோமோனாஸ் உயிர்பூசணக் கொல்லியினை
சூடோமோனாஸ் பயிர்களில் உண்டாகும் தண்டுவாடல், இலைகருகல், இலைப்புள்ளி, குழை நோய், அழுகல் போன்ற நோய்களைக் கட்டப்படுத்துகிறது. மேலும் பயிரின் வேர்களைத் தாக்கும். நூற்புழுக்களை கட்டுப்படுத்துகிறது. நிலத்தில் அதிகமான அளவு உள்ள இரும்புச்சத்தினை கிரகித்து பயிரின் வளர்ச்சியினை ஊக்குவிக்கிறது. சூடோமோனாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து மாலைவேளையில் தெளிக்கலாம்

 

 

 

 

 

 

 

உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
டிரைகோகிராம்மாவினை ஒட்டுண்ணி உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
இரசாயன பூச்சிக் கொல்லிகளின் உபயோகத்தினை சுமார் 35/ வரை குறைத்து உற்பத்திச் செலவினை குறைக்கிறது. இதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்டு தீமை செய்யும் பூச்சிகள் முட்டைப்பருவத்திலேயே அழிக்கப்படுகிறது. இதனை கையாளுவதும் மிகவும் எளிதானதாகும்.
நெல், கரும்பு, பருத்தி, காய்கறிப்பயிர்களைத் தாக்கும் இளங்குருத்துப்புழு, காய்ப்புழு, தண்டு மற்றும் காய்த்துளைப்பான்களைக் கட்டுப்படுத்துகிறது. நெல், கரும்பு மற்றும் காய்கறிப்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 10 மில்லியும், பருத்திக்கு 12 மில்லியும் பரிந்துரை செய்யப்படுகிறது. 1 மில்லி அட்டையினை 7 துண்டாக்கி நூலினால் ஆறு செடிகளில் கட்ட வேண்டும். 1 மிலி அட்டையில் இருந்து சுமார் 15,000 -20,000 குளவிகள் பொரித்து வெளிவரும். 15 நாட்கள் இடைவெளியில் இதனை உபயோகிக்க வேண்டும்.
பொறிவண்டின் பயன்கள்
பொறிவண்டு பயிருக்கு தீமை செய்யும் பூச்சிகளான மாவுப்பூச்சி, புகையான், தத்துப்பூச்சி, அசுவினி, இலைபேன், சுருள் பூச்சி, இலைமடக்கும் புழு போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக மாவுப் பூச்சியினை நன்கு கட்டுப்படுத்தும் பொறிவண்டின்புழு 900 முதல் 1500 மாவுப்பூச்சியின் முட்டைகளையும், 300 குஞ்சுகளையும், 30 மாவுப்பூச்சியினையும் தின்றுவிடும். இதனை ஏக்கருக்கு 100 என்ற எண்ணிக்கையில் வாங்கி வயலில் விடலாம். விட்ட பின்னர் செயற்கை மருந்து அடிக்கக்கூடாது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories