புழுவின் வாழ்க்கை பருவம் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள்

புழுவின் வாழ்க்கை பருவம் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள்
முட்டையிலிருந்து வெளி வர 3 முதல் 5 நாட்கள் ஆகும்
புழு பருவம் 10 முதல் 14 நாட்கள் வரை இருக்கும் இவற்றில்தான் அதிகம் பயிரை சேதப்படுத்தும்
கூட்டுப்புழு பருவம் 7-9 நாட்கள்
முதிர்ந்த பருவம் 5-7 நாள்
மொத்தம் 20 முதல் 25 நாட்கள் இருக்கும்
எந்த ஒரு புழுவிற்கும் 4 பருவம் இருக்கும்
4 பருவத்திற்கும் எதிப் பூச்சிகள் உண்டு
முட்டை பருவம்
புழுவின் முட்டை பருவத்தை கட்டுப்படுத்த கோடை உழவு செய்தல் மற்றும் எதிர்பூச்சியான டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி உள்ளது
இவை ஒரு அந்துபூச்சி
இது பச்சை புழு எங்கு முட்டை இட்டுள்ளதோ அதில் தன்னுடைய முட்டைகளை இட்டு அழிக்கக் கூடியது
ஒருகுண்டு ஊசியில் 10 குளவி உட்காரும் அளவுக்கு இருக்கும்
ஒரு ஏக்கருக்கு 5 சிசி கட்டலாம்
ஒரு சிசி அட்டையில் சுமார் 10 ஆயிரம் குளவி இருக்கும்
70சதம் முதல் 80 சதம் பெண் குளவி இருக்கும்
ஒரு பெண் குளவி 4 முட்டைகள் இடும்
6 மாத பயிருக்கு 4 முறை கட்டலாம்
பூ பூக்கும் பருவத்திலிருந்து கட்டலாம்
ஒரு அட்டையின் விலை ரூ 40
டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிக்கி உணவாக தேனை – பஞ்சில் நனைத்து ஒரு பாலித்தீன் கவரில் வைத்து ( அந்த பாலித்தீன் கவரில் சிறு சிறு ஓட்டைகள் போடவேண்டும்) 5 மீட்டருக்கு ஒன்று என்ற இடைவெளியில் இலையின் அடியில் கட்டி விட வேண்டும் .
இவ்வாறு கூட்டு புழுவின் முட்டைப்பருவத்தை கட்டுப்படுத்தலாம் இதேபோல கரும்பு பயிரில் இடைக்கணு புழுவிற்கும் கட்டலாம். இவற்றை மழை வெயிலிருந்து பாதுகாக்க ஊடுபயிர் நெருக்கமாக தட்டைப்பயிர், உளுந்து போடலாம் காற்று அடிக்கும் திசையில் வைக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories