பூங்கார் அரிசி பயன்கள் :

பூங்கார் அரிசி பயன்கள் :

உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.

கர்ப்பிணி பெண்கள் ஆறு மாத காலத்தில் பூங்கார் அரிசியை கஞ்சி வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த அரிசியில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டியாக்ஸிடன்டுகள், மற்றும் தயாமின் போன்ற சத்துக்கள் உள்ளன.

வயிறு உபாதைகள், மற்றும் குடல்புண் (அல்சர்) உகந்த உணவாகும்.

பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட்டுவர, இடுப்பு, வயிறு, கால் வலி நீங்கும்.

ரத்தத்தில் ஹீனமோக்ளோபின் அதிகரிக்க உதவும்

தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், பிறக்கும் குழந்தையும் (Healthy Baby) ஆரோக்கியமாக இருக்கும்.

குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் (Mother’s Milk) நன்கு சுரக்கும். தாய், சேயின் ஆரோக்கியம் நீடிக்கும்.

பெண்களுக்கான ஹார்மோன்-சுரப்பி துண்டவல்லது, உடலுறுதி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

இந்த வகை அரிசியை மற்ற அரிசியோடு ஒப்பிடும்போது, இரும்பு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது. இது ஒரு அபாரமான சுவையை பெற்றுள்ளது.

அரிசியின் சிவப்பு நிறத்திற்கு, இதனுள் உள்ள அந்தோ சின்னானின் காரணமாகும், மேலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால், நமது உடலில் பிரீ ராடிசல்ஸ் ஏற்படும் பாதிப்பினை போக்கவல்லது.

இந்த உணவினை பழையசோறு அல்லது நீராகாரம் உட்கொள்ளும் போது, நமக்கு தேவையான வைட்டமின் B  கிடைக்கிறது.பக்கவாத நோய்க்கு எதிரானது, (வரும் முன் அல்லது வந்த பின் பாதுகாக்கின்றது)

நுண்ணூட்ட வளம்(micronutrients) உள்ளதால், நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுகிறது.

பரம்பரை நோயின் தாக்கம் மற்றும் celiac diseases நமது உடலில் இருந்து குறைக்க அல்லது வராமல் செய்ய உதவும்

இந்த உணவின் 50கிராம் அளவீடின்படி, 3கிராம் நார்சத்து, 48கிராம் கார்போஹைட்ரெட்ஸ், 8 விழுக்காடு புரதசத்து உள்ளது.

இந்த உணவின் முக்கியத்துவமாக பார்க்க வேண்டியவையில் ஒன்று உணவு உட்கொண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவினை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறது, மேலும் வியர்வை சுரப்பிகளை தூண்டுவதால் வியர்வை வெளியேற்றம் நடக்கிறது

ரத்தநாளங்களில் உள்ள கொழுப்புகளை நீக்க வல்லது, மேலும் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது

உடற்பருமன் குறைக்கும், தேவையான நேரத்தில் பசி எடுக்கும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories