பூ உதிர்வதை தடுக்க
நன்கு புளித்த தயிர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்
மேலும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் பெருங்காயம் என்ற விகிதத்தில் கலக்கி இந்த கரைசலை செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் சுரைக்காய் , பீர்க்கங்காய், பூசணிக்காய், காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை தடுக்கலாம்.
மிளகாயில் பூசணநோய்த் தாக்குவதால் பூக்கள் பூத்தவுடன் கீழே கொட்டிப் போய்விடும்; மாலை வேளைகளில் சாம்பிராணி புகை போடுவதால் பூஞ்சாண நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம்
காற்று வீசும் திசைக்கு நேர் எதிர் திசையில் நின்று பயிர்களின் அடிப்பகுதியில் புகை படுமாறு புகைமூட்டம் போட வேண்டும்.
ஒரு மண் சட்டியில் பற்ற வைத்த கரியைப் போட்டு சாம்பிராணி பொடியை அதில் தூவி புகைமூட்டம் போட வேண்டும்.
அல்லது சாண எருவரட்டியை பானைக்குள் போட்டு தீ மூட்டி சாமிபிராணி போட்டு புகை மூட்டம் பிடிக்கலாம்
பூஞ்சாணம் பயிர்களில் அதிகம் தென்பட்டால் செடி வாடி கருகலாக இருக்கும்
இவற்றை கட்டுப்படுத்த சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்
அல்லது செடிக்கு அருகில் ஊற்றி விடலாம் வாழைக்கு நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளது. நன்றி
வேளாண்மை செய்தி தொகுப்பு அன்பரசு